ராஜினாமா பண்ணிட்டு தவெகவுக்கு வந்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களில் 3 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை? வாரிய தலைவர் பதவி மட்டும் தான்.. எங்க கட்சி எம்.எல்.ஏ ஆகனும்ன்னா அதுக்கு இளைஞர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் இருக்கனும்.. கறாராக சொன்னாரா முதல்வர் விஜய்? எம்எல்ஏ சீட் வேணும்னு அடம் பிடிக்கிறவங்க ஒன்னு புரிஞ்சுக்கோங்க… இது பழைய மாதிரி வாரிசுகளுக்கும் சிபாரிசுக்கும் சீட் கொடுக்குற கட்சி இல்லை! விஜய் ஒருமுறை ஆலோசிச்சு முடிவு எடுத்துட்டாருன்னா… அதுக்கு அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரு…

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, அதிமுக தலைமைக்கு எதிராக கட்சியின் உள்ளேயே ஒரு…

vijay bussy aadhav

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, அதிமுக தலைமைக்கு எதிராக கட்சியின் உள்ளேயே ஒரு தரப்பினர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்க தொடங்கினர். அரசியல் குழப்பங்கள் நீடித்த சூழலில், அதிருப்தியாளர்கள் 25 பேர் சட்டமன்றத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்து ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்தனர். இந்த துரோக நடவடிக்கையை தொடர்ந்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

அதிமுக தலைமையின் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையால் தங்களின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில், அதிருப்தி எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய தொடங்கினர். ஆனால், எடப்பாடி அணிக்கு மீண்டும் செல்ல சற்றும் விருப்பம் இல்லாமல், தங்களின் அரசியல் எதிர்காலத்தை கருதி நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் அதிரடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பதவியை துறந்த கையோடு அவர்கள் முறைப்படி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இதற்கு பிரதிபலனாக, வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூகம் மற்றும் அரசியல் கணக்குகள் முற்றிலும் வேறாக உள்ளதாக தெரிகிறது. ராஜினாமா செய்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் புதிய அலையை உருவாக்க நினைக்கும் தவெக, பாரம்பரிய அரசியல் முகங்களை தவிர்த்து, அந்தந்த தொகுதிகளில் மக்கள் செல்வாக்குள்ள தவெக-வின் உண்மையான உழைப்பாளர்களான புதுமுகங்களை வேட்பாளர்களாக களம் இறக்க தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத மற்ற மூன்று முன்னாள் எம்எல்ஏக்களையும் சமாதானப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய வாரிய தலைவர் பதவிகளை வழங்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது. அதிகாரமிக்க இந்த வாரிய தலைவர் பதவிகள் மூலம் அவர்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் என்று தலைமை கருதியது. இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலும் தயார் செய்யப்பட்டு, அவர்களை பதவியேற்க செய்வதற்கான ஆரம்பக்கட்ட நகர்வுகள் தவெக தரப்பில் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தவெக தலைமையின் இந்த அதிரடி முடிவு அந்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு மக்கள் பிரதிநிதியாக தொடர்வதே பெருமை என்றும், தங்களுக்கு எம்எல்ஏ பதவியே போதும், வாரியத் தலைவர் பதவி வேண்டாம் என்று அவர்கள் தவெக உயர்மட்ட நிர்வாகிகளிடம் கறாராக கூறிவிட்டதாகத் தெரிகிறது. வாரிய பதவிகளை விட தேர்தல் களத்தில் நின்று தங்களின் செல்வாக்கை நிரூபிக்கவே அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் புதிய வியூகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களின் பிடிவாதம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் இழுபறி காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்பொழுது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்து கட்சியின் தனித்துவத்தை காட்டுவதா அல்லது தங்களை நம்பி வந்த மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அவர்களுக்கே சீட் வழங்குவதா என்ற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுக்கப்போகும் இறுதி முடிவு, தவெகவின் எதிர்கால தேர்தல் அரசியலிலும் இடைத்தேர்தல் வெற்றிகளிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அரசியல் களம் சூடேறியுள்ளது.