நேற்று கே.என்.நேரு, இன்று செந்தில் பாலாஜி.. கேஸ் கோப்புகள் எல்லாம் வேகமா நகருது.. தப்பு செஞ்சா எல்லா முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி.. முதல்வர் விஜய் ஆட்டம் தொடங்கிவிட்டது.. இனி ஒவ்வொரு பாலும் சிக்ஸர் தான்.. இந்த ரெண்டு பேரோட நிக்காது, திராவிட ஆட்சியில் ஊழல் செஞ்ச எல்லா அமைச்சர்களும் மாட்டுவாங்க.. முன்னாள் முதலமைச்சர்களும் தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது.. ஏன்னா இது தளபதியோட ஆட்சி…

தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு மாபெரும் புயல் வீச தொடங்கியுள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான “வேலைக்கு லஞ்சம்” பெற்ற முறுகேடு வழக்கில், அவரை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சட்டப்படி விசாரிப்பதற்கான…

senthil balaji vs vijay

தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு மாபெரும் புயல் வீச தொடங்கியுள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான “வேலைக்கு லஞ்சம்” பெற்ற முறுகேடு வழக்கில், அவரை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சட்டப்படி விசாரிப்பதற்கான இறுதி அனுமதியை கோரி, தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர். வி. அர்லேகரின் ஒப்புதலுக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பூர்வ கோப்புகளில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்தே இந்த ஆவணங்கள் மிக ரகசியமாக ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அரியணையில் அமர்ந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி அதிரடி நகர்வு, கடந்த கால ஊழல்களுக்கு தனது ஆட்சியில் எவ்வித இடமும் இல்லை என்பதை திட்டவட்டமாக உணர்த்தும் ஒரு சிக்ஸராகவே பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கு, கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது நடைபெற்ற ஒரு பெரும் முறைகேடாகும். போக்குவரத்து கழகங்களில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமித்ததில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த வழக்கை விரிவாக பதிவு செய்து தீவிரமாக புலனாய்வு செய்து வந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தனது இறுதி புகாரை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளுநரின் இந்த முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் அவரது மீதான அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்படும்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் நீண்ட நாட்களாக தொடர்ந்த ஒரு பெரிய அதிகாரத்துவ இழுபறியும் மறைந்துள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்திலேயே, அப்போதைய ஆளுநராக இருந்த ஆர். என். ரவியிடம் அமலாக்கத்துறை இந்த அனுமதிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ராஜ் பவனில் இருந்து மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட அந்த கோப்புகளை, கடந்த அக்டோபர் மாதத்தில் அப்போதைய திமுக அரசு திருப்பி அனுப்பியது. அமலாக்கத்துறையின் கடிதம் நேரடியாக தங்களுக்குத்தான் வந்திருக்க வேண்டும் என்றும், ஆளுநர் வழியாக இது வந்திருக்க கூடாது என்றும் தொழில்நுட்ப காரணங்களை காட்டி திமுக அரசு அதனை முடக்கியது. கடந்த மாதம்கூட, தற்போதைய தலைமை செயலாளர் எம். சாய்குமாருக்கு எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி முந்தைய திமுக அரசில் அமைச்சராக பதவி வகித்த காரணத்தினாலேயே இந்த அனுமதி வழங்கும் நடைமுறைகள் திட்டமிட்டே முடக்கப்பட்டு, தாமதிக்கப்பட்டு வந்ததாக அமலாக்கத்துறை பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தது.

இருப்பினும், தற்போதைய புதிய அரசியல் சூழலில், முதல்வர் விஜய் அவர்களின் பச்சைக்கொடிக்கு பிறகு இந்த ஒட்டுமொத்த தடையும உடைக்கப்பட்டு, கோப்புகள் ஆளுநரின் மேஜைக்கு நேராக சென்று சேர்ந்துள்ளன. சட்ட விதிகளின்படி, ஒரு நபர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அவரை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஆளுநரே இறுதி ஒப்புதலை வழங்க வேண்டும் என்ற தொழில்நுட்ப நெறிமுறையை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளிலும் கூட இதேபோல அன்றைய ஆளுநரே முழுமையான ஒப்புதலை அளித்திருந்த வரலாற்று பின்னணியையும் தலைமை செயலக அதிகாரிகள் தற்போது கோடிட்டு காட்டுகின்றனர். ஆளுநர் அர்லேகர் இந்த கோப்பில் கையெழுத்திட்ட அடுத்த சில தினங்களிலேயே, தமிழ்நாடு அரசு இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை விரைவாக வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறை இந்த வழக்கின் தீவிர தன்மையை உணர்த்தும் வகையில், தங்களின் புலனாய்வு விவரங்கள், குற்றச்சாட்டுகளின் வரைவு மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் ஒரு பென் டிரைவில் சேகரித்து, அதனை மிக ரகசியமான குறிப்புடன் தலைமை செயலாளரிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இதேபோல முந்தைய ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய இன்னும் சில முன்னாள் அமைச்சர்களை விசாரிப்பதற்கான பிற கோப்புகளும் தற்போது ராஜ் பவனின் பரிசீலனையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருந்ததால் மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்றும், ஆளுநர் தானாக முன்வந்து ‘சுயமோட்டோ’ அடிப்படையில் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் முந்தைய திமுக அரசு வாதிட்டு முட்டுக்கட்டை போட்டிருந்த அத்தனை வாதங்களும் தற்போது தவிடுபொடியாகியுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், இந்த விவகாரம் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய திமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தற்போதைய புதிய விஜய் அரசு எவ்வித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் கொண்டு நிறுத்த துணிந்துவிட்டது என்பதை முதலமைச்சரின் இந்த அதிரடி கையெழுத்து மிக தெளிவாக நிரூபித்துள்ளது. இதனால் திமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் சித்தாந்த போர் மேலும் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின் வரப்போகும் அந்த அரசாணையும், அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி எதிர்கொள்ள போகும் இந்த அதிரடியான சட்ட போராட்டமும் தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வை முழுமையாக தீர்மானிக்க போவது மட்டும் உறுதி.