தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். அவர் பதவியேற்ற இந்த மிகக்குறுகிய காலத்திற்குள், குறிப்பாக கடந்த 20 நாட்களில், அவர் மீதும் அவரது புதிய தவெக அரசு மீதும் எதிர்க்கட்சிகளாலும் சில குறிப்பிட்ட சமூக ஊடக பிரிவினராலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவதூறுகளும் பொய் குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவை அல்ல. புதிய அரசுக்கு குறைந்தபட்ச கால அவகாசம் கூட தராமல், விடிய விடிய பொய்களை ஜோடித்தும், நிர்வாக குளறுபடிகள் நடப்பது போன்றதொரு போலி பிம்பத்தை உருவாக்கவும் ஆளுங்கட்சியை இழந்த விரக்தியில் இருக்கும் சில அரசியல் சக்திகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்த திட்டமிட்ட அவதூறு பிரசாரங்களின் பின்னணியில், சமூக வலைத்தளங்களில் ஒரு போஸ்ட்டுக்கு 200 ரூபாய் கூலி வாங்கி வேலை செய்யும் ஐடி விங் உபிக்களின் போராட்ட நாடகங்களும், விஷமத்தனமான பதிவுகளும் அரங்கேறி வருகின்றன. தவெக அரசு எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான நிர்வாக முடிவுகளையும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பதும், சாதாரண விஷயங்களை பூதாகரமாக்கி காட்டுவதும் இவர்களின் தினசரி பணியாக மாறியிருக்கிறது. எவ்வாறாவது மக்களின் கவனத்தை திருப்பி, புதிய முதலமைச்சர் விஜய் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று அரங்கேற்றப்படும் இந்த நாடகங்கள் அனைத்தும் மிகக் கேவலமான அரசியல் உத்திகளாகவே நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றன.
ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரசார புயலிலும் முதலமைச்சர் விஜய் அவர்களின் மிகப்பெரிய பலமும், அதிர்ஷ்டமும் என்னவென்றால், தமிழக மக்கள் இந்த மலிவான பொய் குற்றச்சாட்டுகளை கொஞ்சம் கூட நம்ப தயாராக இல்லை என்பதுதான். கூலிக்கு ஆட்களை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் போலியான லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் ஒருபோதும் உண்மையான மக்கள் ஆதரவாக மாறாது என்பதை அரசியல் எதிரிகள் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. மொபைல் திரைக்குள் அமர்ந்துகொண்டு சிலர் பரப்பும் அவதூறுகளை, அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சாமானிய மக்கள் தங்களின் விவேகத்தால் முற்றிலுமாக நிராகரித்து தள்ளியுள்ளனர்.
தமிழக மக்கள் முதலமைச்சர் விஜய் மீது வைத்துள்ள அன்பு என்பது வெறும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, அது குடும்ப உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தார்மீக பிணைப்பாகும். தவெக அரசு மற்றும் விஜய் என்ன செய்ததாக அரசியல் எதிரிகள் வீணாகக் குற்றச்சாட்டு கூறினாலும், “என் மகன் தப்பு செய்ய மாட்டான், என் தம்பி தப்பு செய்ய மாட்டான், எங்க அண்ணன் தப்பு செய்ய மாட்டாரு” என்று தமிழகத்தின் தாய்மார்களும், பெரியவர்களும், இளைஞர்களும் ஒற்றைக் குரலில் தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அளவுக்கு ஒரு தலைவன் மீது சாமானிய மக்கள் வைத்திருக்கும் இந்தத் தூய்மையான நம்பிக்கைதான் சார் அரசியலில் ஆகச்சிறந்த கடவுள்.
மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு தலைவனை, வெறும் போலியான வதந்திகளாலோ அல்லது திட்டமிடப்பட்ட சதி வலைகளாலோ வீழ்த்திவிட முடியாது என்பதற்கு தமிழகத்தின் தற்போதைய மக்கள் அலையே சான்றாகும். மக்கள் முதல்வர் விஜய் மீது இத்தகைய பேராதரவையும் நம்பிக்கையையும் வைத்திருக்கும் வரை, அரசியல் எதிரிகளின் பொய்கள் எவ்வளவு பெரிய புயல் போல் திரண்டு வந்தாலும், அவை மக்களின் உண்மையான அன்பிற்கு முன்னால் செல்லாக்காசாகி ‘புஸ்ஸூன்னு’ காற்றில் கரைந்து போய்விடும் என்பதுதான் நிதர்சனம். மக்களின் இந்த அரண்தான் தவெக அரசை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த கட்டத்தை நோக்கி தைரியமாக வழிநடத்துகிறது.
முடிவாக, தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் என்பது வாரிசு அரசியலின் முற்றுப்புள்ளிக்கும், சாமானியர்களின் எழுச்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பதவியேற்ற 20 நாட்களில் எதிர்கொண்ட அத்தனை அவதூறுகளையும் தனது மௌனத்தாலும், மக்கள் நல செயல்பாடுகளாலும் தகர்த்தெறிந்துள்ளார் முதலமைச்சர் விஜய். காசு கொடுத்து நடத்தப்படும் போராட்ட நாடகங்களால் ஒருபோதும் மக்கள் மனதை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் தங்களின் பழைய பாணியை மாற்றி கொள்வது நல்லது; ஏனேன்றால், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்தச் செயல் வீரரை இன்னும் பத்தாண்டுகளுக்குத் தமிழக அரசியலில் யாராலும் அசைக்க முடியாது என்பதே காலத்தின் தீர்ப்பாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
