உயர் கொழுப்பு உங்கள் உயிருக்கு ஆப்பு..! உடனே இதைச் செய்யுங்க!

கொழுப்பு அதிகமானால் பல்வேறு பிரச்சனைகள் உடலில் வந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் இது இதய நோய் ஆகியவற்றையும் கொண்டு வந்து விடுகின்றன. கொழுப்பு அதிகமானால் சில எச்சரிக்கைகளைக் காட்டும் விதத்தில் உடலில் சில அறிகுறிகள்…

கொழுப்பு அதிகமானால் பல்வேறு பிரச்சனைகள் உடலில் வந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் இது இதய நோய் ஆகியவற்றையும் கொண்டு வந்து விடுகின்றன.

கொழுப்பு அதிகமானால் சில எச்சரிக்கைகளைக் காட்டும் விதத்தில் உடலில் சில அறிகுறிகள் தென்படுகின்றன. என்னென்னன்னு பாருங்க.

உயர் கொலஸ்ட்ரால் அமைதியாக வளரலாம். ஆனால் அது உங்கள் தோல், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் எச்சரிக்கை சைகைகளை விட்டுச் செல்லும்.

ஜான்தெலாஸ்மா என்று ஒரு அறிகுறி தோன்றுகிறது. இது கண் இமைகளைச் சுற்றிலும் தோன்றும் மஞ்சள் நிற சிறிய தகடுகளைக் காட்டுகிறது. இது உடலில் கொழுப்பு தேக்கம் அதிகமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஜான்தோமா என்று ஒரு அறிகுறி வருகிறது. இது என்னன்னா, தோலுக்குக் கீழே கொழுப்பு கட்டிகள் உருவாகின்றன. கை, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் காணப்படலாம்.

கார்னியல் ஆர்க் என்று ஒரு அறிகுறி உண்டாகிறது. இது என்னன்னா, கண் கருவிழியைச் சுற்றிலும் வெள்ளை அல்லது சாம்பல் நிற வளையத்தை உருவாகச் செய்கிறது. இளம் வயதில் இது இருந்தால் கவனிக்க வேண்டியது அவசியம்.

மிகவும் ஆபத்தான விஷயம் வெளியில் தெரியாது. அதிக கொழுப்பால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவங்களை உருவாக்கி, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கலாம்.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, புகைப்பிடிப்பது, அதிக உடல் எடை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப மரபு போன்றவை தான் கொழுப்பு உடலில் அதிகரிக்க காரணங்கள்.

இதுல நாம கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உயர் கொழுப்பால் உள்ள பலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அதனால் ரெகுலரா முழு உடற்பரிசோதனை செய்வது அவசியம். சரியான நேரத்தில் கண்டறிவது உங்கள் இதயத்தையும் உயிரையும் காப்பாற்றலாம்.