தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு மாபெரும் தலைகீழ் மாற்றத்தை சந்தித்துள்ளது. தவெக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் மக்களின் பேராதரவோடு ஆட்சி கட்டிலில் அமர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று தனது அதிரடி மக்கள் நலப்பணிகளை தொடங்கியுள்ளார். இத்தகைய இமாலய புரட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.
சீமான் மட்டும் இந்த தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்திற்குள் சென்றிருந்தால், முதலமைச்சர் விஜய்யை கேள்வி மேல் கேள்வி கேட்டு கதற விட்டிருப்பார்” என்று அவரது தம்பிகள் சிலர் பொதுவெளியில் பேசி வருவது தற்போதைய எதார்த்த அரசியலுக்கு முற்றிலும் முரணான நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்று முழக்கங்களை கேட்கும் நடுநிலையான அரசியல் விமர்சகர்களும் சாமானிய பொதுமக்களும் ஒரு மிக எதார்த்தமான கேள்வியை நாம் தமிழர் கட்சியினரை நோக்கி முன்வைக்கின்றனர். அரசியல் களம் என்பது வெறும் மேடை பேச்சுகளாலும், அடுக்குமொழி வசனங்களாலும் மட்டுமே இயங்குவது அல்ல என்பதை இந்த் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. கட்சி ஆரம்பித்து வெறும் இரண்டே வருடங்களில், எவ்வித பாரம்பரிய பின்னணியும் இன்றி, மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய் எங்கே? கட்சி ஆரம்பித்துச் சுமார் 16 வருடங்கள் ஆகியும், இன்னும் ஒரு தொகுதியில் கூட தனித்து நின்று டெபாசிட் வாங்குவதற்கு கூட வக்கில்லாமல் தவித்து வரும் சீமான் எங்கே என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே ஒப்பிட்டுக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காரைக்குடி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் களம், நாம் தமிழர் கட்சியின் தற்போதைய தரைமட்ட பலத்தை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தவெகவின் அசுர வேக பிரசாரத்திற்கு முன்னால் நிற்க முடியாமல், நாம் தமிழர் கட்சியின் சீமான் காரைக்குடியில் படுதோல்வி அடைந்து, வாக்கு எண்ணிக்கையில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படி தனது சொந்த கட்சியின் வாக்கு வங்கியையே தக்கவைக்க முடியாமல், நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு நபர், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 20 நாட்களில் அடுக்கடுக்கான நற்பணிகளை செய்து வரும் முதலமைச்சரை கதற விடுவாராம் என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது என பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
உண்மையைக் கூற வேண்டுமென்றால், தமிழக மக்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இதுவரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீதும், சீமானின் விடாமுயற்சி மீதும் ஓரளவாவது நம்பிக்கையும் அனுதாபமும் இருந்து வந்தது. எப்போதாவது ஒரு நாள் அவர்கள் தங்களது தேர்தல் உத்திகளை மாற்றி, நேர்மையான பாதையில் வாக்கு வங்கியை உயர்த்துவார்கள் என்று தம்பிகள் எதிர்பார்த்தனர். ஆனால், 16 வருடங்களாகியும் எவ்வித முற்போக்கான மாற்றமும் இல்லாமல், வெறும் மேடை ஆவேசத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்குவதால், அந்த எஞ்சியிருந்த சற்றே நம்பிக்கையும் இந்தத் தேர்தல் முடிவுகளோடு ஒட்டுமொத்தமாக காலி ஆகிவிட்டது. இனிமேல் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்ற ஒரு அமைப்பு அரசியல் ரீதியாக மீண்டெழுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை தற்போதைய களநிலவரம் தெளிவாக காட்டுகிறது.
நாம் தமிழர் கட்சியின் இந்தத் தொடர் வீழ்ச்சியையும், தேர்தல் தோல்விகளையும் கண்டு விரக்தியடைந்த அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களே தற்போது மாற்றுச் சிந்தனைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். “இனிமேலும் இந்த வெற்றுப் பேச்சுகளையும், கற்பனைக் கதைகளையும் நம்பி எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வீணடிக்க நாங்கள் தயாராக இல்லை” என்று பலர் தவெகவின் நேர்மையான தூய்மை அரசியலை நோக்கி அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். தம்பிகள் பலரே பொதுவெளியில், “இனிமேல் அரசியல் என்ற பெயரில் காலத்தைக் கடத்தாமல், மரியாதையாகக் கட்சியை முழுமையாகக் கலைத்துவிட்டு, வீட்டில் இருக்கும் புள்ள குட்டிகளை நன்றாகப் படிக்க வையுங்கள் அப்பா; அதுதான் குடும்பத்திற்கும் இந்த மண்ணுக்கும் நல்லது” என்று தங்களது தலைமைக்குக் காரசாரமான ஆலோசனைகளைக் கூறத் தொடங்கிவிட்டனர்.
சுருக்கமாகச் சொன்னால், வெற்றுப் பேச்சுக்கான காலம் முடிந்து, செயலுக்கான காலம் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது என்பதை முதலமைச்சர் விஜய்யின் இந்த 20 நாட்கால அதிரடி ஆட்சி நிரூபித்துள்ளது. தவெகவின் இந்த அசுர வேக மக்கள் நலப்பயணத்திற்கு முன்னால், 16 ஆண்டுகாலமாகப் பழம்பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் கணக்குகளும், சீமானின் மேடை ஆவேசங்களும் மக்கள் மன்றத்தில் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டன. மக்களின் உண்மையானத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் உணர்சிகளை மட்டுமே தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த நினைத்தவர்களின் சகாப்தம் தமிழ்நாட்டில் நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்பது மட்டும் திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
