பரீட்சைக்கு நேரமாச்சு என்ற பெயரில் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒரு நாடகம் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் உரிமைகளை எல்லாம் வாங்கித் தான் பரீட்சைக்கு நேரமாச்சு என்ற பெயரில் முக்தா சீனிவாசன் ஒரு திரைப்படமாக எடுத்தார். அதில் சிவாஜி கதாநாயகனாக நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகமாக நடித்த ஒய்.ஜி.மகேந்திரன் திரையிலே சிவாஜி நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போ எல்லா படமும் பார்ட் 2 வா வர்றது தானே சீசனா இருக்கு. அந்த வகையில பரீட்சைக்கு நேரமாச்சு படத்தின் பார்ட் 2 கதையை வரடு குட்டி என்ற பெயரில் நாடகமாக நடித்துக் கொண்டு இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சமீப காலமாக அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிற வாய்ப்பு அமைந்து கொண்டு இருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாவற்றிலும் மிகச்சிறப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அடுத்த மாசம் அவரது நடிப்பில் சாருகேசி என்ற படம் வரவிருக்கிறது. அது மகேந்திரனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்று வயது 76. வரடு குட்டி நாடகத்தின் கடைசி காட்சியில் சர்வர் சுந்தரம் படத்தில் இருந்து ஒரு பாட்டைப் போட்டு அட்டகாசமாக ஆடுகிறார்.
இந்த வயசிலும் அவருக்கு அட்டகாசமாக ஆட முடிகிறதுன்னா அதுக்கு முக்கியமான காரணம் நாடகக் கலை மேல அவருக்கு உள்ள ஆர்வம் தான். மதுவந்தியும் இந்த நாடகத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார்.
ஐந்தாறு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு 2 மணி நேரத்துக்கு நாடகம் போடுவது மிகப்பெரிய சவால் தான். அதை மிகவும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



