உணவே மருந்துன்னு திருமூலர் சொல்லி இருக்கிறார். நம் உடல் ஆரோக்கியமா இருப்பதற்கு மிக முக்கியப் பங்கு வகிப்பவற்றில் உணவும் ஒன்று. அதனால் சாப்பாடு விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அந்த வகையில் நாம் சில விஷயங்களைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நம் உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? எதை எதை சேர்த்து சாப்பிடக்கூடாது…. சமையலுக்கும் என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடிப்பதுன்னு பார்க்கலாமா…
பாலுடன் மீன், கீரை, புளிப்புக் கனிகள், கம்பு, கொள்ளு, முள்ளங்கி சேரக்கூடாது. தயிருடன் கோழிக்கறி, மாமிசம், வாழைப்பழம் சேராமல் தவிர்க்க வேண்டும். கரும்பு தின்ற உடன் நீர் அருந்தக் கூடாது. மதுவுடன் சர்க்கரையையும் சேர்த்து அருந்தக் கூடாது. வெற்றிலையையும், எண்ணையையும் சேர்க்கக்கூடாது. கொத்துப் பசலைக் கீரையுடன் எள்ளு சேர்க்கக்கூடாது.
தேன், நெய், எண்ணை இவற்றில் இரண்டோ, மூன்றோ அனைத்துமே சம அளவில் சேர்க்கக்கூடாது. மீன் பொரித்த எண்ணையை சமையலில் சேர்க்கக்கூடாது. நார்ச்சத்து நீங்கிய மைதா, ரவா, சேமியா, ஜவ்வரிசி ஆகியவற்றை தினமும் பயன்படுத்த வேண்டாம். பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
இதை எல்லாம் இன்று நேற்று அல்ல. அப்பவே நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் இன்றைய கணினியுகத்தில் யார் இதை எல்லாம் கடைபிடிக்கிறாங்க? ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ன்னு ஈசியா சொல்லிட்டுப் போறாங்க. ஆனால் அவங்க மேலே உள்ள விதிமுறைகளையும் கணக்கில் எடுத்து அதன்படி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



