பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி அந்தக் காலகட்டங்கள்ல தொடர்ச்சியா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி எல்லாரிடமும் பேசுவாரு. அப்படி வையாபுரிக்கிட்டயும் பேசிக்கிட்டு இருந்தாரு. என்ன வையாபுரின்னு கேட்டார். எழில்னு ஒரு டைரக்டர். பிரமாதமா கதை வச்சிக்கிட்டு தெருத் தெருவா அலைஞ்சிட்டு இருக்காரு சார்னு சொல்றாரு.
சரிய்யா, அவரை நாளைக்கு ஆபீஸ்க்கு வரச் சொல்லுய்யான்னு ஆர்.பி.சௌத்ரி சொல்றாரு. வையாபுரியும் எழிலைப் போகச் சொல்கிறார். எழில் போய் முழுக்கதையும் சௌத்ரியிடம் சொல்ல, அவருக்கும் பிடித்துப் போகிறது. அப்புறம் நாளைக்குப் போய் விஜய் சார்கிட்ட கதை சொல்லு. அவரு கால்ஷீட் இருக்குன்னு சொல்லவும், எழில் போய் விஜயிடம் கதை சொல்கிறார்.
அப்புறம் விஜய்க்கிட்ட கதை சொன்னியான்னு சௌத்ரி எழிலிடம் கேட்க, சொன்னேன் சார். ஆனால் பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு தெரியலன்னு சொல்றாரு. சரிய்யா. காருல ஏறுன்னு விஜய் வீட்டுக்கேக் கூட்டிப் போகிறார் சௌத்ரி.
அங்கு விஜயிடம் என்ன கதை பிடிச்சிருக்கான்னு கேட்க, பிடிச்சிருக்கு சார். ஆனால் ஒரு சில டவுட்டுன்னு சொல்லவும், அதை அங்கேயே எழிலை வைத்து கிளியர் பண்ணி விடுகிறார் சௌத்ரி. அப்படி உருவானதுதான் துள்ளாத மனமும் துள்ளும். ஒரு படம்னா இப்படித்தான் இருக்கணும் என்பது போல இருந்தது. படம் அதிரி புதிரி வெற்றது. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
1999ல் எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி, பொன்னம்பலம், மதன்பாப் நடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும். படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். பாடல்கள் எல்லாமே அற்புத ரகம். தொடு தொடு எனவே, இருபது கோடி, பளபளக்குது, இன்னிசை பாடி வரும், மேகமாய் வந்து போகிறாய் ஆகிய பாடல்கள் உள்ளன.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



