வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!

ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம்…

ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று.

திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம் பலன் கொடுக்கும். மீனாட்சி அம்மையே சொக்கநாதரை வரவேற்று பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் காட்சி இங்கு தான் நடக்கும். இதைத் தரிசனம் பண்ணினால் குடும்ப ஒற்றுமை, நல்ல திருமண வாழ்க்கை கிடைக்கும். சோடசி ரூபினியாக அற்புதமாக அம்பாள் அங்கு காட்சி தருகிறாள்.

குழந்தை வேணும்னு நினைக்கிறவர்கள் வழிபட வேண்டிய அம்பாளின் தரிசனம் இதுதான். பாலா என்ற ரூபத்தில் அம்பாள் காலை நேரத்தில் காட்சி தருவாள். இந்த கோலத்தில் அம்பாளை வழிபட்டால் குழந்தைக்காகக் காத்திருப்பவர்களுக்கு அம்பாளே ரூபினியாக வந்து குழந்தை கிடைப்பாள்.

இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். தொழிலில் நல்ல வளர்ச்சி, நல்ல செல்வம் வேணும்னு காத்திருப்பவர்களுக்கு இதுதான் தரிசனம். அம்பாள் மாலை நேரத்தில் வைரக்கிரீடம் சாத்தி, தங்க கவசம் சாத்தி இருக்கும் கோலத்தில் வழிபாடு செய்தால் நிச்சயமாக தொழில், வியாபாரத்தில் விருத்தி அடையலாம். இத்தனை சிறப்பும் உடைய அன்னை மீனாட்சியின் திருமணம் 28.4.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் முகூர்த்த நேரம் உள்ளது.

இந்த நேரத்தில் தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் மாற்ற முடியாதவர்கள் 9 மணி முதல் 10.30 மணி வரை மாற்ற வேண்டாம். அப்போது எமகண்டம் இருக்கு. 10.35மணி முதல்11.30 மணிக்குள் மாற்றிக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.