தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதிய திருப்பமாக, ஓய்வு பெற்ற முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் 234 தொகுதிகளிலும் தரைமட்டத்தில் நடத்திய ரகசிய சர்வே முடிவுகள் கசிந்துள்ளன. இந்த ஆய்வின் முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சுமார் 40% வாக்குகள் உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சாதாரண புள்ளிவிவரம் அல்ல, தமிழகத்தின் இரு பெரும் திராவிட கோட்டைகளையும் ஒரே அடியில் தகர்க்கக்கூடிய ஒரு அரசியல் சுனாமி என்பதை தேர்தல் ரிப்போர்ட்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த 40% வாக்குறுதி என்ற செய்தி, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதோடு, அவர்களின் தேர்தல் வியூகங்களையே தலைகீழாக மாற்றியுள்ளது. வழக்கமாக வாக்குகள் சிதறும் போது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்தாலும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கு, விஜய்யின் இந்த எழுச்சியால் தவிடுபொடியாகியுள்ளது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் அவர் நடத்திய ரோடு ஷோக்களில் திரண்ட மக்கள் கடல், வெறும் சினிமா கவர்ச்சி அல்ல, அது தற்போதைய ஆட்சி முறைக்கு எதிரான ஒரு மிகப்பெரிய கோபத்தின் வெளிப்பாடு என்பதை இந்த சர்வே முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய் ஒரு “ஒற்றை நம்பிக்கையாக” உருவெடுத்துள்ளது பாரம்பரியக் கட்சிகளின் தூக்கத்தை கலைத்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் வெறும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த நிலையை சமாளிக்க ஆளுங்கட்சி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. “ஆட்சியை இழந்தால் அடுத்த நிமிடம் பாஜக வச்சி செஞ்சுடும்” என்ற நிதர்சனமான அச்சம் அறிவாலயத்தின் பெருந்தலைகளை வாட்டுகிறது. மத்தியில் இருக்கும் அதிகாரமும், அமலாக்க துறையும் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பக்கம் திரும்பலாம் என்ற பயம், ஆட்சியை தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற வெறியை உண்டாக்கியுள்ளது. இந்த கடைசி 15 நாட்களில் மக்களின் மனநிலையை மாற்ற பணபலமோ அல்லது புதுமையான தேர்தல் வாக்குறுதிகளோ எடுபடுமா என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கே எழுந்துள்ளது.
விஜய்யின் வருகையை ஆரம்பத்தில் சாதாரணமாக கருதியவர்கள், இன்று அவர் 40% வாக்குகளை தன் பக்கம் இழுப்பார் என்ற செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் இந்த சர்வே தமிழக அரசியலின் பெருந்தலைகளை ஆட்டக் கண்டுள்ளது மட்டும் உண்மை.
இந்த தேர்தல் ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, அது தமிழகத்தின் அரசியல் அடையாளத்தை தீர்மானிக்கும் ஒரு மாபெரும் யுத்தமாகும். இதில் விஜய்யின் வெற்றி என்பது தமிழகத்தின் புதிய விடியலாக அமையுமா அல்லது பாரம்பரிய கட்சிகள் தங்களைச் சமாளித்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
