ஓபிஎஸ்-க்கு வேலை செய்ய மாட்டோம்.. திடீரென போர்க்கொடி தூக்குகிறார்களா போடி திமுக நிர்வாகிகள்? நேற்று வரை அவர் எதிரி, இன்று நம் கூட்டணியின் வேட்பாளரா? எப்படி ஏற்று கொள்வது? காலங்காலமாக திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடையாதா? இதுதான் எங்களுக்கு தலைமை கொடுக்கும் மரியாதையா?

தமிழக அரசியல் களத்தில் நீண்டகாலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போடியில் களம் காணுகிறார். ஆனால் அவருக்காக களப்பணியாற்றும் திமுக உடன்பிறப்புகள் மத்தியில் பெரும்…

ops

தமிழக அரசியல் களத்தில் நீண்டகாலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போடியில் களம் காணுகிறார். ஆனால் அவருக்காக களப்பணியாற்றும் திமுக உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “மேடைகளில் யாரை ஊழல்வாதி என்றும், மக்கள் விரோத ஆட்சி நடத்தியவர் என்றும் நாங்கள் விமர்சித்தோமோ, இன்று அவருக்காகவே வாக்கு சேகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை தருகிறது” என்று போடி திமுக தொண்டர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

திமுக தொண்டர்களின் இந்த கொதிப்பு, பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் சீனியர் நிர்வாகிகள், ஒரு தேர்தல் வெற்றிக்காக தங்கள் அடையாளத்தை அடகு வைக்க தயாராக இல்லை. “உதயசூரியன் சின்னத்தில் நின்றாலும், காலங்காலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த ஒருவருக்கு நாங்கள் ஏன் உழைக்க வேண்டும்?” என்ற தார்மீக கேள்வி அடிமட்ட தொண்டனின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்த கடுமையான அதிருப்தி, தேர்தல் களப்பணிகளில் ஒருவித மந்தநிலையை உருவாக்கியுள்ளது. ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் முழு மனதுடன் வேலை செய்கிறார்களா அல்லது பெயரளவிற்கு மட்டும் களத்தில் நிற்கிறார்களா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பிரச்சாரத்திற்கு சென்றாலும், வாக்காளர்களிடம் ஓபிஎஸ் தரப்பிற்காக வாக்கு கேட்கும்போது ஏற்படும் தயக்கம், தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம், திமுகவின் மறைமுக அல்லது நேரடி ஆதரவு இருந்தபோதிலும் ஓபிஎஸ் அவர்களால் இம்முறை வெற்றிக்கனியை பறிக்க முடியுமா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வாக்கு வங்கி ஒருபுறமும், எடப்பாடி பழனிசாமி தரப்பின் தீவிர எதிர்ப்பு மறுபுறமும் இருக்கும் நிலையில், திமுக தொண்டர்களின் 100 சதவீத ஒத்துழைப்பு இல்லாமல் ஓபிஎஸ் வெற்றி பெறுவது என்பது எட்டாக்கனியாகவே தெரிகிறது.

உதயசூரியன் சின்னத்தின் பலம் இருந்தும், உட்கட்சி அதிருப்தி காரணமாக போதிய வாக்குகள் ஓபிஎஸ் தரப்பிற்கு செல்லாமல் போனால், அவர் தோல்வியை தழுவ நேரிடும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழல் திமுக தலைமைக்குப் பெரும் தர்மசங்கடமான நிலையையே உருவாக்கியுள்ளது.