கூட்டணி கணக்கு போட்டு நீங்க ஜெயிக்க பாக்குறீங்க… ஆனா மக்களோட மனக்கணக்குல விஜய் எப்போவோ ஜெயிச்சுட்டார்.. தலைவர் சொன்னமாதிரி சிங்கம் சிங்கிளா தான் வரும்.. பங்காளிங்க ரெண்டு பேரும் கை கோத்தா… இந்த சிங்கம் பயந்துருமா? நீங்க கனவுல கோட்டை கட்டி விஜய் நான் அந்த கோட்டையையே மாத்தி காட்டுவார்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய சக்தியின் வருகை, பல ஆண்டுகளாக தமிழகத்தை…

tvk dmk admk

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய சக்தியின் வருகை, பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளிடையே ஒருவித பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளது. விஜய் ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால், அவருக்கான அரசியல் வேகம் இன்னும் பலமடைந்திருக்கும் என்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சூழலில், விஜய்யின் தாக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை வளைத்து பிடித்து, அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்ற அதீத தன்னம்பிக்கையுடன் காய்களை நகர்த்தி வருகிறது. தொகுதிகளை பிரிப்பதில் “நாங்கள் கொடுப்பதை தான் நீங்கள் வாங்க வேண்டும்” என்ற ஒரு மேலாதிக்கமான அணுகுமுறையை திமுக கையாளுவது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தது, நீண்ட காலமாக திமுகவுடன் இருக்கும் சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிகே போன்ற கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தவெகவின் வருகையால் ஏற்படக்கூடிய வாக்கு சிதறலை தடுக்க, சிறிய கட்சிகளை கூட வெளியே விடாமல் இழுத்து பிடித்து வைத்து கொள்ள திமுக எடுக்கும் இந்த முயற்சி, தொகுதி பங்கீட்டில் பெரும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மிகவும் நிதானமாகவும், திட்டமிட்ட வகையிலும் காய்களை நகர்த்தி வருவது தொண்டர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளை ஒதுக்குவதில் எடப்பாடியார் எடுத்த முடிவு ஒரு துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்விலும் அட்வென்சரஸாக எதையும் செய்யாமல், பழைய அமைச்சர்கள் மற்றும் நன்கு அறிமுகமான முகங்களுக்கே மீண்டும் வாய்ப்பளித்து, தொகுதிகளில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளார். திமுக அமைச்சர்கள் வலுவாக உள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு அதிமுக வேட்பாளர்களுக்கு பாதுகாப்பான தொகுதிகளை அவர் தேர்வு செய்தது அதிமுகவின் தேர்தல் வியூகம் மிகவும் ஆழமானது என்பதை காட்டுகிறது.

பெரம்பூர் போன்ற தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது மற்றும் சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பலவீனமான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது போன்ற நிகழ்வுகள், திராவிட கட்சிகளுக்கு இடையே ஒரு ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. “பங்காளி ஒன்னு நீ வா இல்ல நான் வரேன், ஆனா தவெகவை உள்ளே விட்டுறாதே” என்ற மனநிலையில் இரு கட்சிகளும் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஒருவேளை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானால், தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்தே, இப்போதே அதனை முடக்க வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் சினிமா கவர்ச்சியாக மட்டும் இல்லாமல், ஒரு மாற்று சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்கவே இத்தனை அரசியல் நகர்வுகள் நடக்கின்றன.

மொத்தத்தில், 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்லாது, தமிழகத்தின் அடுத்த முப்பது ஆண்டுகால அரசியலை யார் தீர்மானிக்க போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் ஒரு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.