கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள் இவைகள்தான்!!

By Staff

Published:

253d1e3863393a2e4bf101b2d94e200c

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால், பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம் வாங்க.

கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனால் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்காயினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது
சிறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்கக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் கத்தரிக்காயானது சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்காயானது  உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.

அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக்  குறைக்கச் செய்கின்றது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்காயினை சாப்பிடலாம்.

மேலும் கத்தரிக்காய் புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காயும் உள்ளது.

மேலும் கத்தரிக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டுள்ளது, உடலில் காயங்கள், ஆபரேஷன் செய்தவர்கள் என ஏதேனும் ஒரு பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் கத்தரிக்காயினை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Leave a Comment