உலக நாடுகளுக்கே எரிவாயு தட்டுப்பாட்டை ஈரான் செஞ்சதுன்னா, பாகிஸ்தான்ல்ல மட்டும் எரிவாயு கிடைக்காமல் பலூச் போராளிகள் செய்த ஆச்சரியம்.. எரிவாயு குழாய்களை தகர்த்த பலுச் விடுதலை படை.. குழாயை வெடிக்க வச்சா புகை மட்டும்தான் வரும்னு நினைச்சீங்களா? பாகிஸ்தான் பொருளாதாரமே சாம்பலாக போகுதுன்னு புரிஞ்சுக்கோங்க! பாகிஸ்தான் ஆர்மிக்கு இது ஒரு டியூட்டி… ஆனா பலுச் போராளிகளுக்கு இது ஒரு வெறி! டியூட்டி பாக்குறவன் ஒரு கட்டத்துல ஓடிடுவான், ஆனா வெறி இருக்கறவன் வெற்றியை தொடாம விடமாட்டான்! பலூச் போராளிகள் ஆவேசம்..!

  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் போராளிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பலுச் விடுதலைப் படைகள் , மற்றும் பிற குழுக்கள் ஒருங்கிணைந்து ‘பலுச்…

baloch

 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் போராளிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பலுச் விடுதலைப் படைகள் , மற்றும் பிற குழுக்கள் ஒருங்கிணைந்து ‘பலுச் குடியரசு’ என்ற பெயரில் பாகிஸ்தானின் பொருளாதார தூண்களை தகர்க்கும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கிய சாலைகளை முடக்குவதும், பாகிஸ்தானின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய எரிவாயு குழாய்களை தகர்ப்பதும் அவர்களின் தற்போதைய ராஜதந்திரமாக உள்ளது. காஷ்மோர் பகுதியில் உள்ள 36 அங்குல பிரம்மாண்டமான சுய் எரிவாயு குழாயை வெடிக்க செய்ததன் மூலம், கராச்சி மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் தொழில்சாலைகளுக்கு செல்லும் எரிவாயு விநியோகத்தை அவர்கள் முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.

இந்த எரிவாயு குழாய் தகர்ப்பு என்பது வெறும் ராணுவ தாக்குதல் மட்டுமல்ல, அது பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். SSGC மற்றும் SNGPL மூலம் பாகிஸ்தானில் விநியோகிக்கப்படும் இந்த எரிவாயு, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், உர தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற தேவைகளுக்கு முதுகெலும்பாக உள்ளது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை நீண்டு செல்லும் இந்த குழாய்களைப் பாதுகாப்பது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு இடத்தில் கசிவோ அல்லது வெடிப்போ ஏற்பட்டால், அதை தேடி பிடித்து சரிசெய்வதற்குள் நாட்டின் பெரும் பகுதி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. பலுசிஸ்தானின் இயற்கை வளங்கள் தங்கள் மண்ணுக்கே சொந்தம் என்றும், ஒரு கன அடி எரிவாயுவைக்கூட பாகிஸ்தான் எடுத்து செல்ல விடமாட்டோம் என்றும் போராளிகள் விடுக்கும் எச்சரிக்கை பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது.

மறுபுறம், CPEC வழித்தடத்தின் முக்கியமான காரக்-குஜ்தார் நெடுஞ்சாலையை பலுச் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர்கள் சட்டவிரோத சோதனை சாவடிகளை அமைத்து, பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மற்றும் உளவுத்துறையினரின் நடமாட்டத்தை முடக்கியுள்ளனர். சாதாரண பொதுமக்கள் போல வேடமணிந்து வரும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை சுட்டுக்கொல்லும் அல்லது சிறைபிடிக்கும் ‘ஸ்னாப் செக்கிங்’ முறையை அவர்கள் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். இதன் விளைவாக, அந்த சாலை வழியாக செல்லும் வர்த்தக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ கான்வாய்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவம் இந்த போராட்டங்களை ஒடுக்க Death Squads எனப்படும் கொலை படைகளை பயன்படுத்துவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்தியின் ஆதரவுடன் செயல்படும் இந்த ஆயுதமேந்திய குழுக்கள், அப்பாவி பலுச் இளைஞர்களை கடத்திச் சென்று, அவர்களை பயங்கரவாதிகள் என கூறி சுட்டுக்கொல்வதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இத்தகைய கொடூரமான ஒடுக்குமுறைகள் பலுச் மக்களிடையே பாகிஸ்தான் அரசு மீதான வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்து, ஆயுதமேந்திய போராட்டங்களுக்கு அதிக ஆதரவை தேடித்தருகின்றன.

பலுச் போராளிகளின் இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமன்றி சீனாவிற்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மண்ணில் சீன முதலீடுகள் பாதுகாப்பாக இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் குவாடர் துறைமுக பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அரசு நெடுஞ்சாலைகளின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்து வருவதையும், பலுசிஸ்தான் மெல்ல மெல்ல போராளிகளின் ‘நிழல் அரசாங்கத்தின்’ கீழ் செல்வதையும் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

தற்போது பலுசிஸ்தான் ஒரு யுத்த களமாக மாறியுள்ளது. உணவு தட்டுப்பாடு, மருந்து பற்றாக்குறை மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஜஹ்ரி போன்ற நகரங்களில் பல நாட்களாக நீடிக்கும் ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இந்த போராட்டம் இப்போது நேரடி மோதலில் இருந்து மாறி, உள்கட்டமைப்பு மற்றும் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ‘ஏரியா டொமினன்ஸ்’ என்ற நிலைக்கு சென்றுள்ளது. சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிடாத வரை, பலுசிஸ்தானின் எரிமலை குழம்பு பாகிஸ்தானின் எஞ்சிய பகுதிகளையும் சுட்டெரிக்கும் என்றே தோன்றுகிறது.