ஒன்னு சாதா பிராடு.. இன்னொன்னு உலக பிராடு.. பாகிஸ்தான் – சீனா தயாரித்த JF-17 Thunder போர் விமானங்களை தெரியாம வாங்கிட்டோம்.. சைனா ஐட்டம்ன்னு நிருபீச்சிருச்சே.. புலம்பும் நைஜீரியா.. குழந்தைங்க விளையாடுற பொம்மை விமானங்களை விட மோசம்.. சோத்துக்கே வழியில்லாத உங்களுக்கு எல்லாம் போர் விமானம் தயாரிப்பு எதுக்குடா.. நீ தயாரிக்கிற போர் விமானங்களை நீயே ஏன் பயன்படுத்தலைன்னு இப்ப தான் புரியுது.. சீனா, பாகிஸ்தானை கலாய்த்த நைஜீரியா..!

பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 Thunder போர் விமானங்களை வாங்கிய நைஜீரியா, தற்போது அந்த விமானங்கள் வெறும் “குப்பை” என்றும், அவை செயல்படாத நிலையில் இருப்பதாகவும் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளது. 2021-22…

JF 17

பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 Thunder போர் விமானங்களை வாங்கிய நைஜீரியா, தற்போது அந்த விமானங்கள் வெறும் “குப்பை” என்றும், அவை செயல்படாத நிலையில் இருப்பதாகவும் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளது. 2021-22 காலகட்டத்தில் நைஜீரிய விமானப்படை வாங்கிய மூன்று JF-17 Thunder ரக விமானங்கள், தற்போது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

நைஜீரியாவிலிருந்து கசிந்த அறிக்கைகளின்படி, வாங்கிய மூன்று விமானங்களில் தற்போது ஒரே ஒரு விமானம் மட்டுமே பறக்கும் நிலையில் உள்ளது. மற்ற இரண்டு விமானங்களும் பழுதடைந்துள்ளதால், அவற்றின் பாகங்களை கழற்றி இந்த ஒரு விமானத்தில் பொருத்தி எப்படியோ இயக்கி வருகின்றனர். இந்த விமானங்களில் உள்ள KLJ-7 ரேடார் மிகவும் மோசமான செயல்திறன் கொண்டது என்றும், குறிப்பாக ஈரப்பதம் அதிகம் உள்ள காலநிலைகளில் இது வேலை செய்வதே இல்லை என்றும் நைஜீரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமானத்தின் இறக்கைகள் இணையும் பகுதி மற்றும் ஏர்ஃபிரேமில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது மேற்கத்திய நாடுகளின் தகவல் தொடர்பு அமைப்புகளுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் அமெரிக்க தயாரிப்பு விமானங்களுடன் இணைந்து செயல்பட முடியாமல் நைஜீரியா தவிக்கிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் RD-93 என்ஜின்களை பராமரிப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. பாகங்கள் கிடைப்பதில் 6 முதல் 8 மாதங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.

மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளும் ஏற்கனவே இந்த ஜே.எஃப்-17 விமானங்களை பற்றி இதே போன்ற புகார்களை தெரிவித்துள்ளன. மியான்மர் தனது ஜே.எஃப்-17 விமானங்களை முழுவதுமாக தரைதட்டி வைத்துள்ளது. “ஜே.எஃப்-17” என்பதை நைஜீரியர்கள் தற்போது சிறுவர்கள் விளையாடும் பொம்மை விமானம் என்று கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சீனா தனது விளம்பர பலத்தால் இந்த விமானங்களை விற்று வந்தாலும், அதன் சொந்த விமானப்படை ஏன் இந்த ஜே.எஃப்-17 விமானங்களை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்ற கேள்வி தற்போது உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஒரு ஆயுதத்தை விற்பனை செய்வது என்பது ஒரு கனவை விற்பது போன்றது அல்ல, அது போர்க்களத்தில் செயல்பட வேண்டும்; ஆனால் சீனாவின் ஆயுதங்கள் வெறும் காகித புலிகளாகவே உள்ளன என்பது நைஜீரியாவின் இந்த ‘பிளண்டர்’ மூலம் உறுதியாகியுள்ளது.