தமிழக அரசியல் வரலாற்றில் பாரம்பரிய வாக்கு வங்கிகளே ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற கணக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் முற்றிலுமாக தகர்க்க போகிறது. பல தலைமுறைகளாக தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள், சின்னம் மாற மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையில் திமுகவும் அதிமுகவும் இப்போதும் மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், இன்றைய கள நிலவரம் முற்றிலும் வேறாக இருக்கிறது; அந்த பாரம்பரியக் கோட்டைகளுக்குள் அமைதியாக ஒரு பெரும் அரசியல் புரட்சியை இளைஞர்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தை வெறும் மேடைப் பேச்சுகளோ அல்லது சுவர் விளம்பரங்களோ தீர்மானிக்க போவதில்லை. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நடக்கும் உரையாடல்கள் தான் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய போகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது கூலிக்கு வரும் ஆட்கள் அல்ல, மாறாக அந்தந்த வீட்டில் இருக்கும் ‘Gen Z’ மற்றும் மில்லினியல் இளைஞர்கள். இவர்கள் தங்கள் பெற்றோரிடம் மாற்றத்தின் அவசியத்தை பற்றி தீவிரமாக பேசி வருகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் மட்டும் தன் தந்தை மற்றும் தாயின் மனதை மாற்றி, அவர்களை ‘விசில்’ சின்னத்திற்கு ஓட்டு போட சம்மதிக்க வைத்தால் போதும், விஜய்யின் வாக்கு வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் 40 சதவீதத்தை எளிதில் எட்டிவிடும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக பார்த்து பழகிய திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு தூய்மையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் விதைத்து வருகிறார்கள். இந்த ‘உள்ளூர் பிரச்சாரம்’ தான் திராவிட கட்சிகளின் அடிமட்ட வாக்கு வங்கியை சரித்து வருகிறது.
இளைஞர்களின் இந்த வேகம் கருத்துக்கணிப்பு எடுப்பவர்களையே திணறடித்துள்ளது. வழக்கமான அரசியல் கணக்குகளின்படி ஜாதி மற்றும் பணத்தை வைத்து ஓட்டுகளை பிரித்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, இளைஞர்களின் இந்த லட்சிய பயணம் பெரும் சவாலாக மாறியுள்ளது. “நாங்கள் இத்தனை காலம் ஏமாந்தது போதும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்த ஒரு முறை விஜய்க்கு வாய்ப்பளிப்போம்” என்ற மனநிலைக்கு முதியவர்களும் மெல்ல மெல்ல மாறி வருவது திராவிட கட்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலில் ஏதோ ஒரு மாயாஜாலம் நடக்க போவது மட்டும் இப்போதே உறுதியாக தெரிகிறது. இது வெறும் சினிமா நடிகருக்கான ஈர்ப்பு மட்டுமல்ல, பல ஆண்டுகாலமாக தேங்கி கிடக்கும் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு. விஜய் தனது மாநாடுகள் மற்றும் சந்திப்புகள் மூலம் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம், தற்போது வாக்குறுதிகளாகவும் நம்பிக்கையாகவும் மாறியுள்ளது. திராவிட பேரியக்கங்களின் இரும்பு கோட்டைகள், ஒரு இளைஞர் படையின் எழுச்சியால் தகர்ந்து வருவதை நேரடி தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.
இறுதியாக, தேர்தல் முடிவுகள் வரும்போது அது தமிழகத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும். பாரம்பரிய அரசியல் கணக்குகள் எல்லாம் பொய்த்து போய், இளைய தலைமுறையின் விருப்பமே அரசாங்கமாக உருவெடுக்கும். இன்னும் சில வாரங்களில் நடக்க போகும் இந்த அரசியல் மாற்றம், தமிழகத்தில் இனி ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. 2026 தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு அல்ல, அது தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் ஒரு டிஜிட்டல் மற்றும் சமூகப்புரட்சி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

