முருக பக்தர்களுக்கு வர இருக்கிறது தைப்பூசம். அறுபடை வீடுகளிலும் இந்தத் திருவிழா களைகட்டும். அதிலும் 3ம் படை வீடான பழனிக்குத் தான் சிறப்பு.
பழனி முருகன் ரொம்ப அழகா ஆனந்தமா நமக்கு அருள்புரியக்கூடிய அற்புதமான கடவுள். பழனியில் மட்டும் அல்ல. எல்லா முருகன் கோவில்களிலும் தைப்பூசம் விசேஷமாக நடக்குது. முருக வழிபாடு செய்யும்போது எதைக் கடைபிடிக்கிறீங்களோ இல்லையோ.
ஒண்ணே ஒண்ணைக் கடைபிடித்தே ஆகணும். அது சத்தியம் என்கிற உண்மை. முருகப்பெருமான் உண்மையான கடவுள். அவர் சத்தியமான தெய்வம். அவர் நெருப்புக்கு சமமானவர். அதனால்தான் நெருப்பில் இருந்து தோன்றி இந்த உலக மக்களுக்கு மிக அழகா அற்புதமான கருணைகளை வாரி வழங்குகிறார்.
அப்படிப்பட்ட வள்ளலாக நமக்குக் காட்சி தருகிறார். என்ன கேட்டாலும் தரக்கூடிய வள்ளல். யாருக்கு என்றால் சத்தியம் உள்ளவர்களுக்கு. அப்படிப் பார்க்கும்போது சத்தியம் அப்படிங்கற ஒரு விஷயம் முருக வழிபாடு நமக்குக் கற்றுத் தரும் பாடம். அதற்கு பாம்பன் சுவாமிகளே சாட்சி.
ரொம்ப எளிமையான வழிபாடு இந்த தைப்பூச வழிபாடு. குழந்தை வேணும்னு விரதம் இருப்பவர்கள், கடுமையான நோய் நீங்க பிரார்த்திப்பவர்கள் தைப்பூச வழிபாட்டை மேற்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் கோவிலுக்குப் போனால் குழந்தை வரம் வேண்டும் என்றும், நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும் என்று தான் நாம் இறைவனிடம் வேண்டுவோம். இந்த இரண்டையும் தருவது தைப்பூச விரதம். அதிலும் முருகப்பெருமான் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கும் கொடை வள்ளல் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



