பில்லி, ஏவல், சூன்யம் எல்லாம் போக ஈசியான வழி… முருகனோட இந்தப் பாடலைப் படிங்க!

முருகனை வழிபட்டு அருள்பெற்ற அற்புதமான அருளாளர் ஸ்ரீமன் பாம்பன் சுவாமிகள். இவரை 2வது அருணகிரி நாதர் என்றே அழைப்பர். முருகனை நேருக்கு நேராக தரிசித்த அற்புத ஞானி இவர். இவர் அந்த அனுபவங்களையே பாடல்களாக்கி…

முருகனை வழிபட்டு அருள்பெற்ற அற்புதமான அருளாளர் ஸ்ரீமன் பாம்பன் சுவாமிகள். இவரை 2வது அருணகிரி நாதர் என்றே அழைப்பர். முருகனை நேருக்கு நேராக தரிசித்த அற்புத ஞானி இவர். இவர் அந்த அனுபவங்களையே பாடல்களாக்கி எழுதியுள்ளார். அதுதான் மயூர பந்தம். இது சக்திவாய்ந்தது. இது ஒரு சித்திரக்கவி.

mayoora bantham
mayoora bantham

அந்த வகையில் பாம்பன் சுவாமிகள் எழுதிய இந்தப் பாடல்கள் அற்புத சக்தி வாய்ந்தது. பாம்பன் சுவாமிகள் தொழில் வளர்ச்சிக்காக வேலின் உள்ளே பாடியது சஸ்திர பந்தம். நாம் இப்போது பார்க்கப் போவது மயூர பந்தம். மயிலை வரைந்து அதில் பாடி இருப்பது தான் மயூர பந்தம்.

முருகனுக்கு 3 மயில் உண்டு. பிரணவம் ஒரு மயில், இந்திரன் ஒரு மயில், அப்புறம் சூரபத்மன் சேவலாகவும், மயிலாகவும் மாறுகிற போது ஒரு மயில் வாகனமாக வந்து அமைந்தது. இது சாதாரணமானது அல்ல. பக்தன் எங்கே நினைத்தாலும் முருகனை மயில்தான் கூட்டிக் கொண்டு போகுமாம்.

அந்த வகையில் பாம்பன் சுவாமிகள் இங்கு மயிலுக்கு ஒரு பந்தம் பாடியிருக்கிறார். அதை நாம் பாராயணம் செய்தால் முருகப்பெருமான் விரைந்து வந்து நாம் வேண்டும் வரங்களைத் தருவார். வீட்டில் ஒரே பிரச்சனை, நிம்மதி இல்லை. பில்லி, ஏவல், செய்வினை, சூன்யம் வச்ச மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. அதற்காக பல விதமான செலவுகளை செய்து பார்ப்பார்கள்.

அவர்கள் இந்த மயூர பந்தத்தைத் தொடர்ந்து 48 நாள்கள் பாராயணம் செய்தால் போதும். எல்லா பிரச்சனைகளும் போய் விடும். மனதில் குழப்பம், பயம் நீங்கும். தைரியம், தெளிவு, புரிதல் பிறக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.