தை மகள் பிறந்துவிட்டால் நமக்கு எல்லாம் உற்சாகம் தன்னால் வந்து விடும். முதல் நாளே பொங்கல். மறுநாள் மாட்டுப் பொங்கல். அதற்கும் மறுநாள் காணும் பொங்கல். நாலு நாள் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். தமிழர் திருநாள் என்பதால் உற்சாகத்திற்கு அளவே கிடையாது. சந்தோஷம் ஆக இருப்பது தானே மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம். நீண்ட நாள்களாக வெளியூரில் வேலை பார்க்கும் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் அப்போதுதான் வீட்டுக்கு வருவர். பார்த்து மனம் விட்டுப் பேசி ரசிக்க முடியும். அந்த வகையில் நேற்று பொங்கலை நாம் உற்சாகமாகக் கொண்டாடி விட்டோம்.
இன்று (16.1.2026) மாட்டுப் பொங்கல். மாடு இருந்தால் தான் மாட்டுப்பொங்கலா என்று கிடையாது. சில பேருக்கு குடும்பங்கள்ல பெரியவர்களுக்குப் படைக்கிறதுன்னு இருக்கு. முன்னோர்களை வழிபட்டுக் கும்பிடுவாங்க. இந்தப் பொங்கலை மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடலாம். முன்னோருக்குப் படையலிட்டும் வழிபடலாம்.
இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம். அன்று மாலை 6 மணிக்கு மேலும் மாடுகளுக்குப் படையல் போடலாம். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், வடை செய்து வைத்தும் கும்பிடலாம். சிலர் முன்னோர்களுக்குப் பிரியமான உணவு வகைகளை படையல் வைப்பர்.
அத்துடன் வேட்டி, புடவை, துண்டு வைத்தும் படைக்கலாம். இந்தப் பழக்கமே இல்லாதவர்கள் நந்தி பகவானை வழிபடலாம். அவரோட அனுமதில தான் சிவபெருமானோட கருணையை நாம பெற முடியும். அதனால பக்கத்துல உள்ள சிவன் கோவிலுக்குப் போயிட்டு நந்தி பகவானை வழிபடலாம். அன்றைய நாளில் நாம் ரெண்டு பேருக்காவது அன்னதானம் கொடுப்பது சிறப்பு.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



