80 தொகுதிகள்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுகவிடம் காங்கிரஸ் வைத்த கறார் கோரிக்கை.. பீகார் தோல்விக்கு பின்னரும் இவ்வளவு கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? திமுக கொடுத்த பதிலடி.. விஜய்யை மனதில் வைத்தே வேண்டுமென்றே திமுகவை வெறுப்பேற்றுகிறதா காங்கிரஸ்.. காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும், போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறதா திமுக?

பொதுவாக, மரியாதை நிமித்தமான அரசியல் சந்திப்புகளுக்கு பின்னால், நிச்சயம் சில முக்கியமான அரசியல் கணக்குகள் மற்றும் டீல்கள் இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் ஐவர்…

dmk congress 1

பொதுவாக, மரியாதை நிமித்தமான அரசியல் சந்திப்புகளுக்கு பின்னால், நிச்சயம் சில முக்கியமான அரசியல் கணக்குகள் மற்றும் டீல்கள் இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர் சந்தித்த நிகழ்வு, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் அதிகார பங்கீடு மற்றும் 75 தொகுதிகள் குறித்த இரு கறார் டிமாண்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், இதனால் அறிவாலய தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஐவர் குழுவினர் முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த தலைவர்கள் பலர், ஒரு மக்களவை தொகுதிக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் என்ற அடிப்படையில், கிட்டத்தட்ட 80 சட்டமன்ற தொகுதிகள் வரை கேட்கலாம் என்று வலியுறுத்தியுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணி பலவீனம் மற்றும் தவெக போன்ற புதிய அணிகளின் வரவால், இந்தியா கூட்டணிக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி அதிக எம்எல்ஏக்களைப் பெற முடியும் என்றும் காங்கிரஸ் கணக்கிட்டது.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் தரப்பு இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது. முதலாவது, கிட்டத்தட்ட 80 தொகுதிகளுக்கு குறையாமல், குறைந்தபட்சம் 75 சட்டமன்ற தொகுதிகள் தேவை என்று வலியுறுத்தியது. இதைவிட அதிர்ச்சி அளித்த இரண்டாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அமையவிருக்கும் ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கறாராக கோரியதுதான். பாஜக தேசிய அளவில் அதிமுகவிடம் அதிகார பங்கை கோருவது போலவே, நாமும் மாநில கட்சியான திமுகவிடம் பேசி பார்க்கலாம் என்ற மனநிலையில் காங்கிரஸ் இந்த கோரிக்கையை முன்வைத்தது.

காங்கிரஸ் தரப்பு 75 தொகுதிகள் மற்றும் அதிகார பங்கைக் கோரியபோதும், முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நிதானத்துடனும் கூலாகவும் இந்த கோரிக்கையை எதிர்கொண்டார். அறிவாலய வட்டாரங்களில் நடந்த ஆலோசனைகளின்போது, திமுகவின் மூத்த தலைவர்கள் பீகாரில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை சுட்டிக்காட்டினர். பீகாரில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்ததால்தான், ஆர்ஜேடி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, காங்கிரஸின் பலத்திற்கு ஏற்றவாறு குறைந்த தொகுதிகளை கொடுப்பதே சரியானது என்றும், கடந்த முறை போட்டியிட்ட எண்ணிக்கைக்கு குறையாமல் அல்லது ஒன்று, இரண்டு இடங்கள் கூடுதலாக கொடுக்கலாம் என்றும் திமுகவின் சீனியர்கள் கருத்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை வைத்தபோது, திமுகவின் நிலைப்பாடு மிக தெளிவாக இருந்தது. தமிழ்நாட்டு மண்ணுக்கு மாநில கட்சியுடைய ஒற்றை ஆட்சிதான் சரி என்பதில் திமுக உறுதியாக உள்ளது. தேர்தலில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் என்பது கூட்டணியை தலைமை தாங்குகின்ற கட்சிக்கே சொந்தம் என்று திமுக கருதுகிறது. எனவே, தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகதான் ஆட்சியில் இருக்கும்; ஆட்சி அதிகாரத்தில் எந்த பங்கும் கொடுக்க முடியாது என்பதில் திமுக கறாராக இருக்கிறது.

இந்த சந்திப்பின் முடிவில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு சம்பந்தமாக பின்னர் ஒரு குழு அமைத்து பேசிக்கொள்ளலாம் என்று சுருக்கமாக முடித்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் எப்படியும் வேறு வழியின்றி கூட்டணிக்குள் வரும் என்ற நம்பிக்கையே இதில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. அறிவாலய வட்டாரத்தின் மனநிலை என்னவென்றால், கடந்த முறை கொடுத்த தொகுதிகளை விட ஒன்று, இரண்டு தொகுதிகள் கூடுதலாக கொடுக்கலாம், ஆனால் 40 தொகுதிகளுக்கு மேல் தாண்ட வாய்ப்பே இல்லை என்பதாகும்.

காங்கிரஸ் தரப்பில் இந்த கறார் பேச்சுகள் ராகுல் காந்திக்கு நெருக்கமான கிரிஷ் சோடங்கர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டதால், இது ராகுலின் வாய்ஸாக இருக்கலாம் என்று அறிவாலய தரப்பு கருதுகிறது. இருப்பினும், தேர்தல் நெருங்கும்போது அரசியல் காட்சிகள் மாறலாம் என்றும், போன முறை கொடுத்த தொகுதிகளுக்கு மேலாவது பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.