பொது எதிரியை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்.. விஜய்யை மறைமுகமாக அழைக்கிறாரா ஈபிஎஸ்? விஜய் கூட்டணிக்கு வருவார் என இன்னுமா நம்புகிறார்? செங்கோட்டையன் அதற்கு சம்மதிப்பாரா? கட்சியினர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யும் தந்திரமா? ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் விஜய் மனம் மாறுமா?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கோபிசெட்டிபாளையத்தில் நடந்த சமீபத்திய பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மறைமுகமாக சாடி பேசிய போதிலும், விஜய்யின் தவெக…

vijay eps

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கோபிசெட்டிபாளையத்தில் நடந்த சமீபத்திய பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மறைமுகமாக சாடி பேசிய போதிலும், விஜய்யின் தவெக கட்சியை தாக்கி பேசுவதை திட்டமிட்டே தவிர்த்துள்ளார். இது, எதிர்கால கூட்டணி அமைக்கும் நோக்கத்துடன் ஈபிஎஸ் வகுத்துள்ள ஒரு தந்திமே என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், “கூட்டணி பலத்துடன் களத்தில் நிற்கும் தி.மு.க.வை எதிர்த்து வெற்றிபெற, நாங்களும் ஒரு வலுவான கூட்டணியை அமைத்தே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இதற்காக, எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லியுடன் இணைந்து பலமான திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல, தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்துடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தவெக-வையும் இணைத்துக்கொள்ள ஈபிஎஸ் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வது உறுதியானால், வேறு வாய்ப்பில்லாத நிலையில், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த தவெக, அதிமுகவுடன் கைகோக்கும் என்று ஈபிஎஸ் உறுதியாக நம்புகிறார். இதன் காரணமாகவே, விஜய் குறித்தோ அல்லது தவெக குறித்தோ விமர்சிப்பதை தவிர்த்து, நட்புக்கான கதவை திறந்து வைத்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்துக்கொள்வதில் ஈபிஎஸ்ஸுக்கு தனிப்பட்ட எதிர்ப்பு இல்லை. இருப்பினும், அவர்களுடன் ஒரே மேடையில் அமரவோ அல்லது அதிமுகவின் தொகுதி பங்கீட்டில் அவர்களுக்கு இடமளிக்கவோ அவர் தயாராக இல்லை. இந்த விவகாரங்களை பாஜகவே பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர் தெரிவித்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த மாத இறுதிக்குள் அதிமுகவின் மெகா கூட்டணி இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்றும், அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணியை வலுப்படுத்துவதோடு, ஆளும் தி.மு.க.வுக்கு தேர்தல் நேரத்தில் அதிர்ச்சி கொடுப்பதற்கும் ஈபிஎஸ் தயாராகிவிட்டதாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்றாகவே, கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் அவர், “இன்னும் சில நாள்களில், ஊழல் செய்த தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் இருக்க வேண்டிய இடத்துக்குப் பத்திரமாச் செல்வார்கள்” என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கோவைக்கு வந்த பிரதமரிடம், சில அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் பட்டியலை ஈபிஎஸ் அளித்திருந்ததாகவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை பிரதமர் அலுவலகம் ஓர் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் சமயத்தில் வெளியில் இருக்கக் கூடாது’ என்பதே ஈபிஎஸ்ஸின் திட்டம் என்றும் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் சிலர் தெரிவிக்கின்றனர். டெல்லியின் செயல் திட்டமும் ஈபிஎஸ்ஸின் வேகமும் இணையும் பட்சத்தில், அவரது ‘எடப்பாடி 2.0 திட்டம்’ நிச்சயம் எடுபடும் என்று அதிமுக வட்டாரங்கள் நம்புகின்றன. ஒரு புதிய கணக்குடன் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தைத்தொடங்கியுள்ள ஈபிஎஸ்ஸின் வியூகம் வெற்றிபெறுமா என்பது, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படுவதைப் பொறுத்தே அமையும்.