பெரும்பாலானோர் கோவிலுக்குப் போறது மனஅமைதிக்குத்தான்னு சொல்வாங்க. கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம்னு சிலர் வருவாங்க. ஆனால் கோவிலை வலம் வரும்போது அதை எத்தனை சுற்று சுற்றுவது என்பது பலருக்கும் தெரியாது. பொதுவாக ஒரு முறை அல்லது 3 முறை நவக்கிரகங்கள் என்றால் 9 முறை சுற்றுவார்கள்.
பல கோவில்களில் எத்தனை சுற்று சுற்றினால் என்னென்ன பலன்கள்னு போர்டுல எழுதி இருப்பார்கள். அந்த வகையில் கோவிலில் சென்று சாமி கும்பிடவே நேரமில்லை. இதுல எப்படி சுற்றுவதுன்னு சிலர் அங்கலாய்ப்பர். வாங்க எத்தனை சுற்று சுற்றலாம். என்னென்ன பலன்கள்னு பார்ப்போம்.
கோவிலை வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் அதிகம் நடக்கும்.
கோவில்களை வலம் வரும் போது ஒற்றை படை எண்ணிக்கையில் தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டுமாம். இதற்கு ஏற்றாற் போல் பலன்களும் மாறுபடுமாம். விநாயகர் கோவிலை ஒரு முறை வலம் வந்து வழிபட, தடைகள் விலகும்.
முருகன் கோவிலை 6 முறை வலம் வர, எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
அம்மன் கோவிலை 5 முறை வலம் வர, வெற்றி, மனஅமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோவிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் கோவிலை 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும். பெருமாள் கோவிலை 3 முறை வலம் வர, ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும். நவகிரகங்கள் 9 முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.
1 முறை வலம் வந்தால், இறைவனிடம் நெருங்க செய்யும். 3 முறை வலம் வந்தால், மனச்சுமை குறையும். 5 முறை வலம் வந்தால், விருப்பங்கள் நிறைவேறும். 7 முறை வலம் வந்தால், காரியத்தில் வெற்றி கிடைக்கும். 9 முறை வலம் வந்தால், எதிரிகள் தொல்லை நீங்கும்.
11 முறை வலம் வந்தால், ஆயுள் விருத்தி. 13 முறை வலம் வந்தால், பிரார்த்தனை நிறைவேறும்.15 முறை வலம் வந்தால், செல்வம் பெருகும். 17 முறை வலம் வந்தால், தானிய வளம் பெருகும். 19 முறை வலம் வந்தால், நோய் தீரும். 21 முறை வலம் வந்தால், கல்வி வளர்ச்சி, 27 முறை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 108 முறை வலம் வந்தால், சகல நலன்களும் கிடைக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



