பாகிஸ்தானின் இருண்ட காலம்: ஹிட்லர் காலத்தை விட மோசம்.. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.. கதைகளில் படித்த கொடுமை நிஜத்தில் நடக்கிறது.. இம்ரான்கான் சகோதரி ஆவேசம்.. இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு.. இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.. பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நாட்டில் கடுமையான அடக்குமுறை, ஊடகத்தணிக்கை ஆகியவை நிலவுவதாகவும் அவரது சகோதரி நொரீன் நியாசி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான்…

india pakistan army

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நாட்டில் கடுமையான அடக்குமுறை, ஊடகத்தணிக்கை ஆகியவை நிலவுவதாகவும் அவரது சகோதரி நொரீன் நியாசி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தனது “இருண்ட காலத்தை” சந்தித்து வருவதாக் கூறிய அவர், தற்போதைய சூழலை சர்வாதிகாரம் மற்றும் நாஜி காலத்தின் கொடூரமான நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இராணுவ ஆதரவுடன் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிய நொரீன் நியாசி, எந்தவித கேள்வியும் இன்றி சாதாரண குடிமக்கள் கடத்தப்படுவதாகவும், தாக்கப்பட்டதாகவும், சிறை வைக்கப்பட்டதாகவும் கூறினார். “பாகிஸ்தான் அதன் இருண்ட காலத்தை கடந்து செல்கிறது. அடக்குமுறை ஆட்சியாளர்களை பற்றிய கதைகளை படித்தோம், இப்போது அதில் வாழ்கிறோம்” என்று அவர் வேதனை தெரிவித்தார். மக்கள் சுடப்பட்டு, ஊனமாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஹிட்லர் காலத்தில் மக்களை பாதாள அறைக்கு இழுத்து சென்ற கதைகள் இப்போது இங்கு மீண்டும் நடப்பதாக நான் சில சமயங்களில் உணர்கிறேன்” என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஆகஸ்ட் 2023 முதல் பல வழக்குகளில் சிறையில் உள்ளார். நியாசியின் கூற்றுப்படி, கான் கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் அல்லது கட்சி பிரதிநிதிகள் எவரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நீண்ட தனிமைப்படுத்தல் சிறை விதிகளை மீறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறைக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதுவே அடக்குமுறையின் உச்சம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

நொரீன் நியாசி, இம்ரான் கானின் மற்ற சகோதரிகள் மற்றும் PTI ஆதரவாளர்கள் அனைவரும் அடிலா சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோதும், அவர்கள் போலீஸ் படைகளால் தாக்கப்பட்டதாக கூறினார். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கூடத் தாக்கப்படுவதாகவும், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார். இராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் ஒரு “சர்வாதிகாரி” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானில் ஊடகத் தணிக்கை மிக கடுமையாக இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, அமைதியாக இருக்க அச்சுறுத்தப்படுவதாகவும், அல்லது வெளிநாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம் தேர்தல்களில் மோசடி செய்து, மக்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நீடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இம்ரான் கானுக்கு பொதுமக்களிடையே தொடர்ந்து பரந்த ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு பொறி போதும் என்றும், மக்கள் மத்தியில் கோபம் கொதிநிலையை அடைந்துள்ளதால் ஆர்ப்பாட்டங்கள் விரைவில் தீவிரமடையலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சர்வதேச சமூகம் மனிதாபிமான மீறல்களை புறக்கணிப்பதாகவும் நியாசி அதிருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் நாளுக்கு நாள் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அராஜக ஆட்சி ஆகியவை அந்நாட்டு மக்களை ஆழ்ந்த விரக்திக்கு தள்ளியுள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் கருத்து என்னவென்றால், “இந்தியாவிலிருந்து பிரிந்தது தவறு. நாங்கள் அங்கேயே இருந்திருந்தால், இன்று இந்நேரம் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்திருக்கலாம்” என்பதே. அண்டை நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தான் மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தி வருவது, நாட்டில் நிலவும் தீவிர அதிருப்தியை பிரதிபலிக்கிறது.