கார்த்திகை மாதத்தில் சிகர நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் ஏற்றும் மகாதீபம்தான். ஆனால் அன்று அதிகாலை ஏற்றும் பரணி தீபமும் சிறப்பு வாய்ந்தது. வாங்க அதோட சிறப்பைப் பார்க்கலாம்.
இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம்.
பாவங்கள்னா என்ன? கொலை பண்றதோ, கொள்ளை அடிக்கிறதோ… இதையெல்லாம் பண்ணிட்டு வந்து இந்தப் பாவங்கள் எல்லாம் இப்படி இந்த விளக்கேற்றிட்டு விரதம் இருந்துட்டா சரியா போயிடுமா?
அப்படின்னா கண்டிப்பா சரியா போகாது. இதெல்லாம் நாம் அறிந்தே செய்கிற பாவங்கள். ஆனால் தெரியாமல் செய்யக்கூடிய பாவங்கள்னு இருக்கு. நாம எதையாவது பேசுவோம். அது வேற யாராவது ஒருவருடைய மனசைப் புண்படுத்தி இருக்கும்.
இல்லன்னா நாம நடந்து போகும்போது நம்ம கால்ல ஏதோ புழுக்களோ, பூச்சிகளோ அடிபட்டு, மிதிப்பட்டு இறந்து போயிருக்கும். வாகனங்கள்ல இப்படி போகும்போது நிறைய விஷயங்கள் தெரியாம நடக்குது. இதுமாதிரி தெரியாமல் செய்கிற பாவங்கள். இன்னொன்னும் இருக்கு.
மனதளவில் இவன்லாம் இப்படி இருக்கானேன்னு பொறாமைப்படுவோம். அது கூட பாவ எண்ணங்கள்தான். இப்படி அறியாமல், தெரியாமல் நாம் செய்யக்கூடிய பாவங்களைப் போக்குவதற்கு உண்டான நாள் தான் இந்த பரணி தீபம்.
எத்தனை எத்தனையோ பாவங்கள் நாம தெரியாம செய்தாலும் அது தெரிந்த பின்னும் அதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இப்போது அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு இந்த பரணியில் தீபம் ஏற்றி மனதார வழிபடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



