தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, திமுகவின் ஆன்மீக மாற்றம் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஆன்மீகத்தை எதிர்க்க முடியாத நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்போது ஆன்மீகத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளன. சுவாமி தயானந்த சரஸ்வதியின் கூற்றை மேற்கோள் காட்டி பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ராவணன் போன்றவர்கள் ‘நாஸ்திக வேடத்தில் வரும் ஆஸ்திகர்கள்’ என்றும், இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
1970-களில் விபூதி பூசி பள்ளிக்கு செல்லவே தயங்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இன்று, தமிழக அரசியலில் ஆன்மீகத்தை எதிர்க்க முடியாத நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தமிழகம் ஆன்மீகத்துடன் ஒன்றிவிட்டதுதான்.
ஒரு காலத்தில் விபூதி பூசி வெளியே சென்றால் கிண்டல் அடிப்பார்கள். ஆனால் இன்று திமுக அமைச்சர்களே பட்டை பட்டையாக விபூதி பூசுகிறார்கள், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக எழுச்சியை இது காட்டுவதாகவும், ஆன்மீகம் தான் திமுகவின் முதல் எதிரி என்றும் அதன் பின்னர் தான் பாஜக, மத்திய அரசு என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
