வீடுகளில் விளக்கேற்றுவது என்பது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு அற்புதமான வழிபாடு. இதை முறைப்படி எப்படி செய்வதுன்னு பார்க்கலாமா…
காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் விளக்கு ஏற்றணும். மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு விளக்கு ஏற்றணும். காலை 6 மணிக்கு முன்னால், மாலை 6 மணிக்குப் பிறகு. அணையா விளக்கு ஏற்றுவது எப்படி?
இதற்கு கணக்கே கிடையாது. இது எரிந்து கொண்டே இருக்கும். இதற்கு திரி மாற்றலாம். அந்த விளக்கை துடைக்க நினைத்தால் இன்னொரு விளக்கை ஏற்றி விட்டு அந்த விளக்கை துடைத்து விட்டு பழைய விளக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
என்னென்ன விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்? மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் போட்டால் அனைத்து வித பீடைகளும் நீங்கும். வெள்ளி விளக்கு திருமகளின் வாசம் கிட்டும். பஞ்சலோக விளக்குல தீபம் ஏற்றினால் சகல தேவதைகளையும் வசியம் செய்யும் பலன் கிடைக்கும்.
வெண்கல விளக்குல தீபம் ஏற்றினால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இவற்றில் அதிவிசேஷம் மண்விளக்கு தான். இதுவே பஞ்சபூத தத்துவங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பொதுவாக ஒரு வீட்டில் 2 தீபங்கள் ஏற்றலாம். அல்லது 5 தீபங்கள் ஏற்றலாம். ஒருமுகம் விளக்கு எனில் நினைத்த காரியங்கள் நினைத்த வண்ணம் நிறைவேறும். 2 தீபங்கள் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
3 தீபங்கள் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும். 4 தீபங்கள் ஏற்றினால் வீடு, மனை, வாசல் வளர்ச்சி பெறும். பீடை நீங்கும். 5 முக விளக்கு ஏற்றினால் ஐஸ்வர்யம், சகல நன்மைகள் உண்டாகும்.
விளக்கு திரி ஒற்றையாகப் போடக்கூடாது. 2 திரிகள் சேர்த்தே போட வேண்டும். பிரார்த்தனை இருந்தால் தாமரைத்தண்டு, வாழைத்தண்டு திரி போடலாம். பஞ்சு திரி சாதாரணமானது. விசேஷமானதும் கூட. நெய்ல விளக்கு ஏற்றுவது அதிவிசேஷம்.
சின்ன திரி போட்டு 5 நிமிஷம் ஏற்றினாலும் விசேஷம். ஏன்னா அஷ்டலட்சுமிகளின் வாசத்தையும் கொண்டு வரும். எள் எண்ணை எனப்படும் நல்லெண்ணையும் விசேஷம். சாப்பாடு, வழிபாட்டுக்கு நல்லது. விக்ரகத்துக்கும் நல்லது. நல்லெண்ணை விளக்கேற்றினால் குடும்பத்திற்கு நல்லது.
விநாயகருக்கு தேங்காய் எண்ணை விசேஷம். குலதெய்வத்துக்கு இலுப்பை எண்ணை, பைரவருக்கு நல்லெண்ணை, அம்பிகைக்கு விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை சிறப்பு. முருகன், பெருமாள் நல்லெண்ணை விசேஷம். சில குலதெய்வங்களுக்கு வேப்பெண்ணை விளக்கு ஏற்றுவது விசேஷம். அல்லது இலுப்பை எண்ணை விசேஷம்.
பொதுவாக ஏற்றுவது என்னன்னா ஒரு நெய் தீபம், ஒரு நல்லெண்ணை தீபம் என ஏற்றலாம். தீபம் எவ்வளவு நேரம் எரிய வேண்டும்? காலையில் விளக்கு ஏற்றினால் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் ஏற்றலாம். அதை நாமாக மலையேற்றலாம். அதுவே விசேஷம். தினமும் திரி மாற்றலாம். விளக்கில் தெய்வத்தையும், குலதெய்வத்தையும் நினைத்து வழிபட வேண்டும்.
விளக்கை எந்த திசையில் வைப்பது? கிழக்கு, மேற்கு திசைகளில் வைப்பது விசேஷம். இந்த திசையை நோக்கி தீபம் இருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



