ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரைலர் தான்.. முழு திரைப்படத்தை காட்டினால் தாங்க மாட்டீர்கள்.. வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தும் முந்தைய இந்தியா அல்ல.. பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா.. இதோடு நிறுத்தினால் நல்லது.. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா..

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாகும் என்று மூத்த இந்திய இராணுவ அதிகாரி உபேந்திரா திவேதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை…

india vs pakistan

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாகும் என்று மூத்த இந்திய இராணுவ அதிகாரி உபேந்திரா திவேதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் உறுதியானது: “நீரும் இரத்தமும் ஒன்றாக பாய முடியாது. பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக செல்ல முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் அமைதி வழிமுறைகளை பாகிஸ்தான் கடைப்பிடித்தால், இந்தியா அதனை ஆதரிக்கும். அதுவரை, பயங்கரவாதிகளும் அவர்களின் தலைவர்களும் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான அச்சுறுத்தல்களாகவே கருதப்படுவார்கள்.

பயங்கரவாதத்தை தூண்டும் எந்தவொரு தரப்புக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். எந்த ஒரு மிரட்டலுக்கும் இந்தியா அஞ்சாது; ஏனெனில் இன்று இந்தியா மிகவும் வலிமையான நிலையில் உள்ளது.

கடந்த காலங்களில் நடந்த ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ போன்ற நடவடிக்கைகளை பற்றி பேசிய உபேந்திரா அவர்கள், அது குறித்த பாகிஸ்தானின் தவறான கணிப்பை விமர்சித்தார். கடந்த கால தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்பட அனைத்தும் ஒரு டிரெய்லர் மட்டுமே. அந்த டிரெய்லரே 88 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் மீண்டும் தவறு செய்தால், அவர்களுக்கு பாடம் புகட்ட இந்தியா தயாராக உள்ளது.”

நடந்துகொண்டிருக்கும் மற்றும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய இராணுவம் எப்போதும் தயாராக உள்ளது. கடந்த கால நடவடிக்கைகளில் இருந்து கற்றுக்கொண்ட முக்கியப் பாடங்கள் இவை:

ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய ஆயுத காவல் படைகள், சைபர் மற்றும் விண்வெளி படைகள் ஆகியவை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இன்றைய போர் என்பது பல கள போர் என்பதால், அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று இன்று கணிக்க முடியாது. அது 88 மணி நேரமாக இருக்கலாம், அல்லது நான்கு மாதங்கள் அல்லது நான்கு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். எனவே, நீண்ட காலப் போருக்கான போதுமான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

இந்தியாவில் பயங்கரவாத நிகழ்வுகள் மிகவும் குறைந்துள்ளன. இந்த ஆண்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 61% பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். மேலும் கல் எறிதல், வன்முறை போராட்டங்கள், கடை அடைப்புகள் போன்றவை கிட்டத்தட்ட நின்றுவிட்டன. அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஷ்மீரின் இளைஞர்கள் தற்போது வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி குறித்த நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வை பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணையவும், தொழில் செய்யவும் விரும்புகின்றனர். பயங்கரவாதத்தின் மீதான மோகம் குறைந்து, இந்தியா மீதான பிணைப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. செங்கோட்டை போன்ற சமீபத்திய பயங்கரவாத முயற்சிகள், அங்குள்ள இளைஞர்களை தவறாக வழிநடத்த முயலும் பயங்கரவாதிகளின் விரக்தியான முயற்சிகளே தவிர, பொதுமக்களின் உணர்வை பிரதிபலிக்கவில்லை.

அதேபோல் பாகிஸ்தானும் இனி பயங்கரவாதத்தை ஊக்குவிக்காமல் தங்களுடைய நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் இரு நாடுகளுக்கும் நல்லது.