டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறியப்படும் பாகிஸ்தான், தற்போது ஆபரேஷன் சிந்துர் 2.0 என்ற ஒரு நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்ற தகவல் வெளியான நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை…

kuwaja

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறியப்படும் பாகிஸ்தான், தற்போது ஆபரேஷன் சிந்துர் 2.0 என்ற ஒரு நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்ற தகவல் வெளியான நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை அருகே டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், அது ஒரு சிலிண்டர் வெடிப்பு என்றும் குவாஜா ஆசிஃப் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தில் வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா உடனடியாக நிராகரித்து, அவை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளது.

குவாஜா ஆசிஃப் ஒருபுறம் ஆப்கானிஸ்தானையும், மறுபுறம் இந்தியாவையும் குற்றம் சாட்டுகிறாரே தவிர, பயங்கரவாதிகளை பல ஆண்டுகளாக வளர்த்து, நிதியளித்த பாகிஸ்தான் இராணுவத்தையோ, அதன் தலைமை பொறுப்பிலுள்ளவர்களையோ அவர் குற்றம் சாட்டவில்லை. அதே விஷ பாம்புகள் இப்போது அவர்களது சொந்த நாட்டில் அவர்களை கொல்கின்றன என்பதை குவாஜா புரிந்து கொண்டாரா? அல்லது புரியாதது போல் நடிக்கிறாரா என்பது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாகிஸ்தானிய தலிபான்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். குவாஜா ஆசிஃப் இதுபோன்று பேசும் ஒவ்வொரு முறையும், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று பாகிஸ்தானுக்குள்ளேயே பலர் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, TTP-ன் ஒரு கிளைக் குழு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் அதிதீவிரம் கொண்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 600 முதல் 800 பேர் வரை இறந்துள்ளனர். பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா பகுதிகளில் இருந்த இந்த தாக்குதல்கள், இப்போது இஸ்லாமாபாத் வரை பரவியுள்ளன.

கடந்த 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் விமானப்படை தனது போர் விமானங்களை கொண்டு அதிக அளவில் வான்வழி ரோந்து பணிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்த பாகிஸ்தானின் அச்சத்தை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், அண்டை நாடான இந்தியாவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டின் உள்ளே கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உலக வரைபடத்திலேயே இருக்க மாட்டீர்கள் என்ற கருத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.