உங்கள் பிரச்சனையை நாங்கள் ஏன் தீர்க்க வேண்டும்? நாங்கள் என்ன பைத்தியக்காரர்கஓளா? தீவிரவாதிகளை வளர்ப்பது நீங்கள்.. அவர்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டுமா? அணு ஆயுதம் வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பாகிஸ்தானை கேள்விகளால் புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும், பாகிஸ்தானின் இராணுவ வட்டாரங்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் அதன் விளைவாக நடந்த தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகள் குறித்து, தாலிபான் நிர்வாகம் பகிரங்க விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீறல்களும், பாகிஸ்தானின்…

afghan pakistan

ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும், பாகிஸ்தானின் இராணுவ வட்டாரங்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் அதன் விளைவாக நடந்த தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகள் குறித்து, தாலிபான் நிர்வாகம் பகிரங்க விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீறல்களும், பாகிஸ்தானின் “நியாயமற்ற” கோரிக்கைகளுமே பேச்சுவார்த்தை முறிந்ததற்கு காரணம் என்று தாலிபான் குற்றம் சாட்டியுள்ளது.

பல்லாண்டு காலப் போர் மற்றும் குழப்பங்களில் இருந்து ஆப்கானிஸ்தான் மீண்டு வருவதால், தாங்கள் ஒரு சமச்சீரான வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதாகவும், அனைத்து அண்டை நாடுகளுடனும் வலுவான உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாகவும் தாலிபான் தெரிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்காக ஆப்கானிஸ்தானின் புவியியல் இருப்பிடத்தை பயன்படுத்துவதே தங்கள் இலக்கு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி செயல்பட்டு வருவதாக தாலிபான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான்வெளியையும், நாட்டின் தலைநகரின் வான்வெளியையும் கூட மீறின. ஆப்கானிஸ்தான் குடிமக்கள், கடைகள் மற்றும் சந்தைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண, கத்தாரில் முதல் சுற்று பேச்சுவார்த்தையும், துருக்கியின் இஸ்தான்புல்லில் மேலும் இரண்டு சுற்றுகளும் நட்பு நாடுகளின் தலையீட்டின் பேரில் நடைபெற்றன.

ஆப்கானிஸ்தான் குழு முழு நல்லெண்ணத்துடனும், தலைமையின் அதிகாரத்துடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட போதிலும், எந்த முன்னேற்றமும் அடையப்படவில்லை. இதற்கு காரணம் பாகிஸ்தானிய பிரதிநிதிகள் வைத்த யதார்த்தமற்ற மற்றும் நியாயமற்ற கோரிக்கைகள் ஆகும்.

நடக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? நாங்கள் அங்கே அமைதி காக்கும் படைகளை வைத்திருக்கிறோமா? பாகிஸ்தான் போலீஸையோ, இராணுவத்தையோ நாங்கள் கட்டுப்படுத்துகிறோமா? ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பை இன்னொரு நாடு உறுதிப்படுத்துவது எப்படி சாத்தியம்? இது தர்க்கமற்ற கோரிக்கை.”

பாகிஸ்தானில் உள்ள தஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) குழுக்களை ஆப்கானிஸ்தானுக்குள் இடம் மாற்ற வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். “உங்கள் பிரச்னையை எங்கள் வீட்டிற்குள் கொண்டு வர நாங்கள் என்ன பைத்தியக்காரர்களா?” என்று தாலிபான் கேள்வியெழுப்பியது.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த வருவதை தடுக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கோரியதை அவர்கள் நிராகரித்தனர். TTP போராளிகள் டுராண்ட் எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு பதிலளித்த தாலிபான், “அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது டுராண்ட் எல்லை முழுவதும் வேலி போடப்பட்டது. உங்களுக்கு பெரிய இராணுவம், உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பம் இருக்கும்போது, ஏன் உங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை? அவர்கள் உங்கள் எல்லைக்குள்ளேயே இருந்தால், ஏன் உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பியது.

TTP பிரச்னை கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ளது என்றும், கடந்த 20 ஆண்டுகளில் 70,000 முதல் 80,000 பேர் இந்தப் போர்களில் உயிரிழந்துள்ளனர் என்றும் தாலிபான் சுட்டிக்காட்டியது. தாலிபானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்னைகளை அதாவது பொருளாதார வீழ்ச்சி, நாணய மதிப்பு குறைவு, இம்ரான் கான் கைது, ஈரானுடனான மோதல்கள் மறைப்பதற்காக எல்லாவற்றிற்கும் ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டுகிறது. அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடு, அந்த வலிமையை பயன்படுத்தி அகதிகளுக்கு எதிராகவும், வெங்காயம் மற்றும் தக்காளிக்கு எதிராக வர்த்தக வழிகளை அடைக்கவும் பயன்படுத்துவது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது?” என்றும் தாலிபான் விமர்சித்துள்ளது.

முடிவாக, ஆப்கானிஸ்தானின் மண் யாருக்கும் எதிராக பயன்படுத்தப்படாது என்றும், ஆனால் சில வட்டங்கள் தங்களுக்கு எதிராகத் திட்டங்களை திணித்தால், தற்காத்து கொள்ளும் உரிமை ஆப்கானிஸ்தானுக்கு உண்டு என்றும் தாலிபான் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.