பாம்பை வளர்த்தால் அது பக்கத்து வீட்டார்களை மட்டும் கடிக்காது.. உங்களையும் கடிக்கும்.. பாகிஸ்தானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த இந்தியா.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. உங்கள் நாட்டை, செயலை சுத்தம் செய்யுங்கள்..!

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், “உங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகளை வளர்த்தால், அவை…

india vs pakistan

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், “உங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகளை வளர்த்தால், அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இறுதியில் அவை வளர்த்தவர்களையே கடிக்கும்,” என்று காரசாரமாக விமர்சித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி கார் அளித்த அறிக்கைகள் குறித்து பதிலளித்த ஜெய்சங்கர், முன்பு ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு வந்தபோது, “உங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகளை வைத்திருந்தால், அவை இறுதியில் உங்களைத்தான் கடிக்கும் என்று சொன்னார். ஆனால், உங்களுக்கு தெரியும், நல்ல ஆலோசனைகளை பாகிஸ்தான் ஏற்பதில்லை.”

“உலகம் இன்று பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப்பார்க்கிறது. கோவிட் காலம் முடிந்துவிட்டாலும், உலகின் நினைவுத்திறன் அவ்வளவு மோசமாக இல்லை. பயங்கரவாத செயல்களின் கைரேகைகள் எங்கே பதிக்கப்பட்டுள்ளன என்பதை உலகம் மறக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“எனது அறிவுரை என்னவென்றால், தயவுசெய்து உங்கள் செயல்களை சுத்தம் செய்யுங்கள். ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சி செய்யுங்கள்,” என்று பாகிஸ்தானுக்கு அவர் அறிவுறுத்தினார்.

காஷ்மீர் குறித்த ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களை இந்தியா கடைப்பிடிக்குமா என்று பாகிஸ்தான் தரப்பு விடுத்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் பாகிஸ்தான் அமைச்சர்களிடம்தான் கேட்க வேண்டும். நீங்கள் தவறான அமைச்சரிடம் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள்,” என்று நேரடியாக பதிலளித்தார்.

“விவாதத்தை வேறு திசைக்கு எடுத்து செல்வதன் மூலம் நீங்கள் எதையும் மறைக்கவோ, யாரையும் குழப்பவோ முடியாது. மக்கள் இதை கண்டறிந்து விட்டார்கள். உங்கள் செயல்களை சுத்தம் செய்யுங்கள். பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை உலகம் செய்ய முயற்சிக்கும்போது, நீங்களும் அதற்கு ஒத்துழைக்க முயற்சி செய்யுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களை உறுதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

“சுதந்திரம் அடைந்ததிலிருந்தே பயங்கரவாதத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக இருக்கும் ஒரு அண்டை நாட்டை இந்தியா எதிர்கொண்டுள்ளது. பல முக்கிய சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் தோன்றி வருகின்றன. ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் அதன் நாட்டவர்கள் நிறைந்துள்ளனர்.”

“நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக அரசின் கொள்கையாக அறிவிக்கும்போதும், பயங்கரவாத மையங்கள் தொழில்மயமான அளவில் செயல்படும்போதும், பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போதும், அத்தகைய செயல்கள் சந்தேகமின்றி கண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாத சூழலமைப்பின் மீது இடைவிடாத அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு அந்நாட்டில் பயங்கரவாதம் குறித்த கவலைகள் குறித்து கேட்கப்பட்டபோது, “ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு மீண்டும் தளமாக செயல்படாது என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் அதிகாரம் உள்ளவர்கள் இந்த கடமையை மதித்து நடப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஜெய்சங்கர் பதிலளித்தார்….