Bigg Boss 9 Tamil : பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதியை சுற்றி நிறைய எதிர்மறையான கருத்துக்கள் தான் இருந்து வரும். ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியே அசந்து போய் பார்வதியை பாராட்டிய சூழலில், அதன் பின்னணி என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி Wild Card போட்டியாளர்களின் வரவுக்கு பின்னரும் கொஞ்சம் சரிவை கண்டு தான் வருகிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதே வேளையில், க்ரூப்பாக ஆடி வந்தவர்கள் தற்போது தனித்தனியாக தங்களது திறனை அறிந்து அதற்கேற்ப பிக் பாஸ் நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என நினைப்பது பெரிய ஒரு மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பார்வதியின் கேம் பிளான்
நான்கு வாரங்களாக பல போட்டியாளர்கள் எதற்கு உள்ளே இருக்கிறோம் என்பதே தெரியாமல், எந்த டாஸ்க்கிலும் ஈடுபாடு காண்பிக்காமல் இருந்து வந்தனர். இதனால், பார்வையாளர்கள் பலரும் கூட சலிப்பு அடைந்திருந்தனர். ஆனால், அதே வேளையில் நெகட்டிவாக கூட பிக் பாஸ் குறித்து பேச வைத்த மிக முக்கியமான போட்டியாளர் தான் பார்வதி.
இவர் ஆரம்பத்தில் இருந்தே எந்தவித விதிகளையும் மதிக்காமல், யாரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் தான் செய்வது சரி என இருந்து வந்தார். ஒருசில நேரங்களில் துணிச்சலாக இருக்கும் பார்வதியின் ஆட்டம் பாராட்டுகளை பெற்றாலும் மற்ற சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் பார்வதியின் செயல் இருந்து வந்தது.
இதற்கு மத்தியில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் சிறந்த பெர்ஃபார்மர் என்ற பெயர் எடுத்திருந்தார் பார்வதி. அவரை பிடிக்காத பலரும் கூட பார்வதியை சிறந்த பெர்ஃபார்மர் என தேர்வு செய்திருந்தனர். இதனிடையே, இந்த வாரம் பார்வதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசுவது பற்றி அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என அவரிடமே போட்டியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
நீங்க அத பாத்துக்க வேணாம்..
இதற்கு பதில் சொன்ன பார்வதி, ‘என் வீட்ல என்ன ரியாக்ட் பண்ணுவாங்க அப்படிங்குறதுக்கு நான் போய் என் அம்மாகிட்டயும் அண்ணாகிட்டயும் விளக்கத்தை குடுத்துக்குறேன். அவங்களுக்காக நீங்க பேச வேணாம். என் வீட்டுக்கு நான் பொறுப்பு. அத நான் பாத்துக்குறேன். என் அம்மாவ பத்தி நீங்க நினைக்க வேணாம்‘ என குறிப்பிட்டிருந்தார்.
இதை வார இறுதியில் வந்த விஜய் சேதுபதி, மீண்டும் ஒருமுறை அந்த வாக்கியத்தை பார்வதியிடம் சொல்ல சொல்லியதுடன், ‘பெண்கள்கிட்ட இந்த மாதிரி சொல்லி ஒடுக்கி வைப்பாங்க. நீங்க சொன்ன ஸ்டேட்மென்டை நான் முழுசா மதிக்குறேன், வரவேற்குறேன்.. இங்க யாரும் சின்ன புள்ளைங்க எல்லாம் இல்ல.. நீங்க என்ன பண்றீங்கனு உங்க எல்லாருக்கும் தெரியும். அதுவே போதும்‘ என பார்வதி கருத்தை விஜய் சேதுபதி பாராட்ட அரங்கமே கைத்தட்டலில் நிரம்பி இருந்தது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

