ஒரு தீபாவளி பட்டாசு வெடிக்க கூட அமெரிக்காவிடம் அனுமதி கேட்கும் பாகிஸ்தான்.. பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தால் சந்தேகம்.. அமெரிக்காவுக்கு தெரியாமல் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பே இல்லை.. சோற்றுக்கே வழியில்லாத பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை எப்படி நடத்தும்?

பாகிஸ்தானின் அணுசக்தித் திறன், அதன் அரசியல் சார்ந்த முடிவுகள், மற்றும் பிராந்தியத்தில் அதன் எதிர்காலம் ஆகியவை குறித்து புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளும், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சில கருத்துக்களும் சர்வதேச…

trump 1

பாகிஸ்தானின் அணுசக்தித் திறன், அதன் அரசியல் சார்ந்த முடிவுகள், மற்றும் பிராந்தியத்தில் அதன் எதிர்காலம் ஆகியவை குறித்து புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளும், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சில கருத்துக்களும் சர்வதேச அளவில் விவாத பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்தது என்ற டிரம்ப்பின் சமீபத்திய கருத்து நம்பத்தகுந்ததாக இல்லை என்றே கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக அண்மையில் கூறிய கருத்து, பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் அணுசக்தித் திட்டத்தின் மீதான அதன் கட்டுப்பாடு குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. டிரம்பின் இந்த கூற்றை ஆய்வாளர்கள் ‘அபத்தமானது’ என்று நிராகரிக்கின்றனர்.

பாகிஸ்தான் ஓர் அமெரிக்கச் சார்பு நாடு. பாகிஸ்தானின் அரசு கட்டமைப்பு, குறிப்பாக அதன் இராணுவத்தின் செயல்பாடுகள், அமெரிக்காவை சார்ந்து இருக்கின்றன. சாதாரண இராணுவ முடிவுகளுக்கு கூட பாகிஸ்தான், அமெரிக்காவை சார்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்குத் தெரியாமல் ஒரு நாடு அணு ஆயுத சோதனை நடத்துவது என்பது சாத்தியமற்றது. பாகிஸ்தான் ஒரு தீபாவளிப் பட்டாசு வெடிக்கக்கூட அமெரிக்காவின் ஒப்புதலை கேட்கும் என்ற அளவுக்கு அதன் சுயாதீன முடிவெடுக்கும் திறன் கேள்விக்குறியாக உள்ளது.

998 ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய 16-வது நாளில் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்தது. மிக குறுகிய கால அவகாசத்தில் இவ்வளவு பெரிய சோதனை திட்டத்தை பாகிஸ்தானால் நடத்த முடிந்ததற்கு பின்னால் அமெரிக்கா உதவி இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

பாகிஸ்தானில் அணு ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவோ அல்லது அது விபத்துக்குள்ளானதாகவோ பேசப்படும்போது, அந்த கிடங்கில் இருந்த அணு ஆயுதங்களின் உண்மையான உரிமையாளர் யார்? என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது. பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிலையில், அது அவ்வளவு பெரிய அணு ஆயுதக் கிடங்கை பராமரித்து சொந்தமாக கொண்டிருக்க முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

அப்படியானால், அந்த கிடங்கில் இருந்த அணு ஆயுதங்கள் அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. பிராந்தியத்தில் உள்ள எதிரி நாடுகளை (இந்தியா, ஈரான், ரஷ்யா) எதிர்கொள்ளும் பொருட்டு, மேற்குலக நாடுகள் பாகிஸ்தானை ஒரு ‘பஃபர் மண்டலமாக’ பயன்படுத்தி, அணு ஆயுதங்களை அங்கு சேமித்து வைத்திருக்கலாம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் மூளும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.ஆப்கானிஸ்தான் இன்று எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்குலைவுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் பகடை காயாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானே ஆகும். எனவே, வரலாற்று ரீதியாகவும், பிராந்திய பாதுகாப்பு சார்ந்தும், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆப்கானிஸ்தானின் இராணுவ தலையீடு என்பது, ஏற்கனவே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிக்கலில் இருக்கும் பாகிஸ்தானை இரண்டு முனைகளில் தாக்கப்பட வைக்கும் (இந்தியா ஒரு பக்கம், ஆப்கானிஸ்தான் மறுபக்கம்). இது பாகிஸ்தானை முற்றிலுமாக நிலைகுலைய செய்து, அந்நாட்டின் வரைபடத்தை மாற்றியமைக்க வழிவகுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

“எந்த ஒரு வல்லரசு உள்ளே நுழைந்தாலும், அது மரியாதையாக வெளியேறாது” என்ற வரலாற்று பின்னணியைக் கொண்ட ஆப்கானிஸ்தான் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டது. அணு ஆயுத மிரட்டலால் அதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. தற்போது இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் வலுவான உறவை பேணி வருவதாகவும், அதன் இராணுவ தளங்களை பயன்படுத்தக் கூட இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.