ஆங்கில மொழி பாகிஸ்தான் நாளிதழான ‘தி ஃப்ரான்டியர் போஸ்ட்டில் (The Frontier Post) தொடர்ந்து வெளியாகும் ரஷ்யாவிற்கு எதிரான கட்டுரைகள் குறித்து நாங்கள் கவனித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த நாளிதழ் அமெரிக்க மயமாக்கப்பட்ட தலையங்க கொள்கையை கொண்டிருப்பதாகவும், இது ரஷ்ய எதிர்ப்பை வேண்டுமென்றே ஊக்குவிப்பதாகவும் ரஷ்யா விமர்சித்துள்ளது.
‘தி ஃப்ரான்டியர் போஸ்ட்’ ஒரு பாகிஸ்தான் இதழ் என்று அழைக்கப்பட்டாலும், அதன் உலகளாவிய செய்தி சேவைகள் அனைத்தும் வாஷிங்டன் நகரில் தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றன.
சர்வதேச செய்திகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த அமெரிக்கமயமாக்கப்பட்ட குழு, ரஷ்ய எதிர்ப்பாளர்களின் கட்டுரைகளுக்கும், ரஷ்ய வெளியுறவுக் கொள்கை மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் பற்றிய விமர்சனங்களுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இந்த நாளிதழின் சர்வதேச பிரிவில் ரஷ்யா அல்லது அதன் தலைமையை நேர்மறையாகவோ அல்லது நடுநிலையாகவோ சித்தரிக்கும் ஒரு கட்டுரைகூட சமீபகாலமாக இல்லை என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
கருத்து சுதந்திரத்தை ரஷ்யா மதிப்பதாகவும், வெவ்வேறு கருத்துகளை வெளியிடும் உரிமை ஆசிரியர் குழுவுக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், ஒரே மாதிரியான மேற்கத்திய பிரச்சாரங்கள் நிறைந்த, மாற்று பார்வை இல்லாத இந்த கட்டுரைகளின் தொடர்ச்சியான வெளியீடு, இது கருத்து சுதந்திரத்தை விட, ரஷ்ய எதிர்ப்பு குழுக்களால் ஊக்குவிக்கப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த நாளிதழ் ஆப்கானிஸ்தான் செய்திகளுக்கு ஒரு பகுதியையே ஒதுக்கியிருந்தாலும், அக்டோபர் 7, 2025-ல் நடந்த மாஸ்கோ ஆலோசனை கூட்டமைப்பு பற்றிய செய்தியை முழுமையாக புறக்கணித்துள்ளது. இந்த கூட்டமைப்பு உள்ளூர் ஊடகங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வெளியிடப்பட்டிருந்தது.
பிராந்திய பிரச்சினைகள் குறித்த பாகிஸ்தானின் அணுகுமுறையை முக்கிய மேடைகளில் எடுத்து செல்வதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளை இந்த மேற்கத்தியமயமாக்கப்பட்ட தலையங்க குழு புறக்கணிப்பதாகவும், இது அதன் ரஷ்ய எதிர்ப்பு கொள்கையை மேலும் அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் ரஷ்யா விமர்சித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
