பாகிஸ்தான் என்றால் நம்பிக்கை துரோகம், நம்பிக்கை துரோகம் என்றால் பாகிஸ்தான்.. ஒருபுறம் ஆப்கனுடன் பேச்சுவார்த்தை.. இன்னொரு புறம் திடீர் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முடிவு செய்த ஆப்கன்? ஆப்கானிஸ்தான் பவர் தெரியாமல் விளையாடும் பாகிஸ்தான்.. தகுந்த பாடம் கற்பிக்கப்படுமா?

பாகிஸ்தான் என்றால் நம்பிக்கை துரோகம், நம்பிக்கை துரோகம் என்றால் பாகிஸ்தான் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போதே, பாகிஸ்தான் மறுபுறம் ஆப்கானிஸ்தான் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான்…

afghan vs pak

பாகிஸ்தான் என்றால் நம்பிக்கை துரோகம், நம்பிக்கை துரோகம் என்றால் பாகிஸ்தான் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போதே, பாகிஸ்தான் மறுபுறம் ஆப்கானிஸ்தான் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின்போல்டாக் (Spin Boldak) மாவட்டத்திலுள்ள லுக்மான் (Lukman) கிராமத்தில் பாகிஸ்தான் படைகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதுடன், மோட்டார் குண்டுகளையும் வீசியுள்ளன.

பாகிஸ்தான் படைகள், ஆப்கானிஸ்தானின் எல்லை காவலர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு பொதுமக்கள் குடியிருப்பையும் இலக்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தோஹா, இஸ்தான்புல் என பல இடங்களில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தும், இஸ்தான்புல்லில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள இந்த முக்கிய தருணத்தில் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், தலிபானுக்கு எதிராக போர் மிரட்டல் விடுத்ததுடன், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் இந்த தாக்குதலுக்கு இதுவரை பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றாலும், எல்லையில் முழுமையான பதற்றம் நிலவுகிறது.