ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிநவீன செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, ‘6M’ என்ற மிகப்பெரிய ATMP (Assembly, Testing, Marking, and Packaging) உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.
‘6M’ வசதி, ISM (India Semiconductor Mission) அங்கீகாரத்துடன் அமைக்கப்படும் முதல் ATMP மையங்களில் ஒன்றாக இது இருக்கும். இந்த உற்பத்தி மையம் ஒடிசாவில் அமையவிருப்பது, மாநிலத்தின் மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் தொழில்களுக்கான புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வழிவகுக்கும்.
புவனேஸ்வரில் அமையவிருக்கும் ‘6M’ ATMP செமிகண்டக்டர் உற்பத்தி மையமானது, அந்த பிராந்தியத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு புதிய செமிகண்டக்டர் உற்பத்தி வசதி அமைக்கப்படும்போது, அது மாநிலத்தின் தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுத் தளத்தையே மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. ‘6M’ மூலம் ஒடிசாவில் எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகள்:
ATMP மையங்களில் நேரடியாக செமிகண்டக்டர் சில்லுகளை அசெம்பிளி செய்தல், சோதனை செய்தல் மற்றும் பேக்கேஜிங் செய்தல் போன்ற பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியாளர்கள், மின்னணுவியல் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவார்கள்.
உலகத் தரம் வாய்ந்த மையமாக இது வளர்வதால், புதிய தொழில்நுட்பங்களை ஆராயவும் மேம்படுத்தவும் திறன்மிக்க ஆராய்ச்சியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். செமிகண்டக்டர் ஆலைக்கு தேவையான உதிரிபாகங்கள், இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பல துணை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புவனேஸ்வர் பகுதியில் உருவாகும். இது பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
செமிகண்டக்டர் தொழில்நுட்ப துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய, ஐடிஐ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் புதிய கல்வி திட்டங்கள் தொடங்கப்படும். இது கல்வித்துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
ஒடிசாவின் உள்ளூர் இளைஞர்கள் இந்த புதிய தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொண்டால், அவர்களுக்கு ஒரு நிலையான மற்றும் உயரிய வருமானம் ஈட்டும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஆலை, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் செமிகண்டக்டர் துறையின் மையமாகப் புவனேஸ்வரை நிலைநிறுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அவ்வப்போது கொடுக்கும் கொசுத்தொல்லை, அமெரிக்கா அவ்வப்போது இடைஞ்சல் தரும் வரிவிதிப்பு ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் இந்தியா தன்னுடைய நாட்டின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இந்த செமி கண்டக்டர் உற்பத்தி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், அப்போது பாகிஸ்தான் தொல்லை மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பு எல்லாம் ஒரு சிறு துரும்பு போல் இந்தியாவுக்கு தெரியும் என்றும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
