குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்லை, சாப்பிடறதுக்கு சோறு இல்லை.. நீர்மூழ்கி கப்பல் தேவையா? 8 நீர்மூழ்கி கப்பலுக்கு எல்லாம் இந்தியா பயப்படுமா? பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லையா? மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கப்பா.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கடும் விமர்சனம்..

பாகிஸ்தான் தனது முதல் சீன வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலை அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டு சேவைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது. இஸ்லாமாபாத்திற்கும் பீஜிங்கிற்கும் இடையேயான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2028…

pak china

பாகிஸ்தான் தனது முதல் சீன வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலை அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டு சேவைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது. இஸ்லாமாபாத்திற்கும் பீஜிங்கிற்கும் இடையேயான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2028 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானுக்கு எட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கப்படும். வடக்கு அரேபிய கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் ரோந்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பாகிஸ்தானின் திறனை இந்த திட்டம் வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் தலைமை அட்மிரல் நவீட் அஷ்ரஃப் அவர்களின் கூற்றுப்படி, கட்டுமான பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன, மேலும் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பாகிஸ்தானின் கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

முதல் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவில் கட்டப்படுகின்றன, மீதமுள்ள நான்கு கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும். இது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் படையை விரிவுபடுத்துவதுடன், கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கும் உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆனால் இந்தியா தற்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவிடமிருந்து பெற்ற டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இயக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டால் பாகிஸ்தான் வாங்கும் நீர்மூழ்கி கப்பல் வெறும் ஜுஜுபி தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் கப்பல்படை வேற லெவல் தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள நிலையில் 8 நீர்மூழ்கி கப்பலை வாங்குவதால் இந்தியாவை பயமுறுத்தலாம் என்பது பாகிஸ்தானின் சிறுபிள்ளைத்தனம் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் கவனம் செலுத்தலாம் என்றும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.