அதிமுக, திமுக, நாதக.. விஜய் வருகையால் யாருக்கு அதிக நஷ்டம்? அஸ்திவாரத்தையே அசைக்கும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேர்த்த வாக்கு சதவீதத்தை விஜய்யிடம் மொத்தமாக இழப்பது யார்? இனிமேல் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது இளைஞர்கள் தான்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகை, தமிழகத்தில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இருபெரும் திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் பிற கட்சிகளின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை…

vijay vs others
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகை, தமிழகத்தில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இருபெரும் திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் பிற கட்சிகளின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தவெகவின் வருகையால், பின்வரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது:
1. அதிமுக
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் கவர்ச்சி கொண்ட தலைவர்களை நம்பி அதிமுகவுக்கு வாக்களிக்கும் விளிம்புநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய் ஒரு பெரிய கவர்ச்சி மையமாக உள்ளார். இந்த ஆதரவாளர்களில் கணிசமானோர், தங்களுக்கு பிடித்த நடிகரின் கட்சிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு வாக்குகள் பொதுவாக அதிமுகவுக்கு செல்வது வழக்கம். தற்போது, அந்த வாக்குகளை தவெக பிரித்து எடுத்து செல்ல அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம், அதிமுகவால் திமுகவை வீழ்த்துவது மேலும் கடினமாகும்.
2. திமுக
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக வாக்களிக்க வரும் முதல் தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலும் ஒரு புதிய மாற்றத்தை நோக்கியே தங்கள் வாக்குகளை பயன்படுத்துகின்றனர். மாற்றம் என்ற கோஷத்துடன் வரும் விஜய்யின் தவெக, இந்த இளம் வாக்காளர்களில் கணிசமானோரை தன் பக்கம் ஈர்க்கும். திராவிட கட்சிகளின் அரசியலில் சலிப்புற்று காணப்படும் ஒரு குறிப்பிட்ட அளவு நடுநிலை வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள், தவெகவை ஒரு புதிய மாற்று சக்தியாகப் பார்க்க வாய்ப்புள்ளது. இது திமுகவின் வாக்கு சதவிகிதத்தில் சிறுசிறு சரிவை ஏற்படுத்தலாம்.
3. நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி, திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாகவும், ஊழலற்ற ஆட்சிக்காகவும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் படித்த சமூகத்தினர் மத்தியில் இந்தக் கட்சிக்கான ஆதரவு உள்ளது. தவெகவும் அதே ‘மாற்றம்’ மற்றும் ‘ஊழலற்ற அரசியல்’ என்ற முழக்கத்துடன் களம் இறங்குவதால், நா.த.க-வுக்கு செல்லவிருந்த மாற்று வாக்குகள் இப்போது தவெக-வின் மக்கள் கவர்ச்சியால் பிளவுபட்டு சிதற வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, நா.த.க-வின் வாக்கு சதவிகிதம் எதிர்பாராத சரிவை சந்திக்கக்கூடும்.
4. பாமக: பாட்டாளி மக்கள் கட்சியை தற்போது இரண்டாக பிரிந்து கிடப்பதால் அக்கட்சியின் 50%  வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீதமுள்ள 50 சதவீத வாக்குகளை தான் அன்புமணியும் அவருடைய தந்தை ராமதாஸ் பிரித்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் பாமக பெரும் வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு மிகவும் குறைவான வாக்கு சதவீதம் இருப்பதால் அந்த வாக்கு சதவீதத்தை முழுமையாக தமிழக வெற்றி கழகத்திடமோ அல்லது அதிமுக-பாஜக கூட்டணிக்கோ செல்ல  அதிக வாய்ப்புண்டு என்றும் கூறப்பட்டு வருகிறது
மொத்தத்த்ஹில் தவெகவின் வருகை என்பது, வெறும் தேர்தல் போட்டியாக இல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரியமான திராவிட அரசியல் கட்டமைப்பிற்கே ஒரு சவாலாக அமைந்துள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வு, இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு பகிர்வை குறைத்து, மூன்றாவது அணியாகவோ அல்லது ஆட்சி மாற்றத்தின் முக்கிய திருப்புமுனை சக்தியாகவோ தவெகவை மாற்றும் ஆற்றலை கொண்டுள்ளது.