கடன் மேல் கடன்.. கடன் கடன் ஒரே கடன்.. உலக அளவில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 4வது இடம்.. இன்னும் கடன் கேட்டுவிடுமோ என நட்பு நாடுகளே அஞ்சுகிறது.. சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியதால் மேலும் சிக்கல்.. பாகிஸ்தானை நாம் அழிக்க தேவையே இல்லை.. அது தானாகவே அழிந்துவிடும்..!

பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாட்டின் தலைவர்கள், தொடர்ந்து வாங்கும் கடன்கள் மற்றும் நீடித்த உறவுகளின் மீதான தவறான பார்வை குறித்தும் எழுப்பும் குரல்கள், அந்நாட்டின் அபாயகரமான…

pakistan2

பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாட்டின் தலைவர்கள், தொடர்ந்து வாங்கும் கடன்கள் மற்றும் நீடித்த உறவுகளின் மீதான தவறான பார்வை குறித்தும் எழுப்பும் குரல்கள், அந்நாட்டின் அபாயகரமான நிலையை உணர்த்துகின்றன.

பாகிஸ்தானிய தலைவர்கள், நாட்டின் பொருளாதார சூழலை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். கடன்கள் மேல் கடன்கள், கடன்கள் மேல் கடன்கள்… உங்களின் முதுகெலும்பு உடைந்துவிடும், நீங்கள் ஒருபோதும் எழுந்து நிற்க முடியாது.” கடனுக்கு மேல் கடன் வாங்குவது தேசத்தின் ஸ்திரத்தன்மையை முழுமையாக சிதைத்துவிடும் என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் தனது 75 ஆண்டுகால வரலாற்றில், பெரும்பாலான ஆண்டுகளை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டங்களிலேயே கழித்துள்ளது. 1989 முதல் 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் IMF-இடம் கடன் வாங்கியுள்ளது. சமீபத்திய மார்ச் 2023 நிலவரப்படி, IMF-இடம் அதிகக் கடன் பெற்ற நாடுகளில் பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.

75 ஆண்டுகளுக்கு பிறகும், இன்று நாம் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி திரிகிறோம். எங்கு பார்த்தாலும் கடன், கடன், கடன். இன்று நாம் எந்த நட்பு நாட்டுக்கு போனாலும், ‘ஏதோ கேட்க வந்திருக்கிறார்கள்’ என்று நினைக்கிறார்கள். யாருக்காவது தொலைபேசியில் அழைத்தால், ‘நம்மிடம் ஏதோ கேட்க போகிறார்கள்’ என்று கருதுகிறார்கள்” என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்கள் அரசை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி போன்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் தலைவர்கள் செல்லும்போது, “நாங்கள் கேட்க வரவில்லை, ஆனால் வேறு வழியில்லை. கடந்த 75 ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்கு உதவியது போல, இன்னும் சில காலம் கைதூக்கி விடுங்கள். நாங்கள் இரவு பகலாக உழைத்து, வியர்வை சிந்தி, சொந்த காலில் நிற்போம்” என்று அவர்கள் உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றனர்.

பொருளாதார சிக்கலுக்கு இணையாக, பாகிஸ்தானை அச்சுறுத்தும் மற்றொரு மிகப்பெரிய சவால் நீர் பற்றாக்குறை ஆகும். பாகிஸ்தானின் சிந்து நதிப் படுகைதான் அந்நாட்டின் உயிர்நாடியாக உள்ளது. மொத்த நீரின் நான்கில் மூன்று பங்கு வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. பாகிஸ்தான் மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பேர் சிந்து நதி நீரை நம்பியே வாழ்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி, 90% பயிர்கள் சிந்து நதி நீரை சார்ந்தே உள்ளன. அனைத்து நீர்மின் திட்டங்களும் அணைகளும் இந்த படுகையை சார்ந்தே உள்ளன.

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்திவிட்டதால், பாகிஸ்தானில் விவசாயம், உணவு உற்பத்தி, குடிநீர் விநியோகம், மின் உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை கைவிடாத வரை சிந்து நதிநீர் கிடைக்க வாய்ப்பே இல்லை.

பாகிஸ்தான் தனது உள்நாட்டு பொருளாதார கொள்கைகளை சீர்திருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மூலம் சுயச்சார்பை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையேல், தொடர் கடன்களின் சுமை அந்நாட்டை மேலும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.