அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பிற நாடுகள் மீது விதிக்கும் கடும் வரிகளுக்கு அமெரிக்கா உள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் பிரேசில் மீது 50% வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக அமெரிக்க செனட்டில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரியை நீக்குவதற்கு ஆதரவாக 52 பேர் வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 48 உறுப்பினர்களும் இருக்கும் நிலையில், ட்ரம்பின் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இது ட்ரம்புக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு ஆகும்.
ஒரு அதிபர், தனது கட்சியின் பெரும்பான்மையுடன் இருக்கும்போது, அவர் எடுக்கும் முடிவை அதே கட்சியினர் எதிர்க்கிறார்கள் என்றால், அவர் முடிவுகள் கலந்தாலோசிக்கப்படாத மற்றும் நாட்டுக்கு நன்மை பயக்காத தன்னிச்சையான முடிவுகளாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரேசிலுக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகை, இந்தியா போன்ற மற்ற நாடுகள் மீதும் விதிக்கப்பட்ட 50% வரியையும் நீக்க வழிவகுக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ரஷ்ய எண்ணெய் மீதான தடை விஷயத்தில் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனால், இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகள் கோரும்போது, அமெரிக்கா அதற்கு சலுகை அளிக்கிறது.
ஆனால் இந்தியா அதே நிறுவனங்களில் இருந்து எண்ணெய் வாங்கும்போது, அமெரிக்கா இந்தியாவை விமர்சிக்கிறது அல்லது வாங்க வேண்டாம் என வற்புறுத்துகிறது. ஆனால், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு சலுகை வழங்கப்படுகிறது. “அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு சலுகை கொடுத்துவிட்டு, இந்தியாவை மட்டும் ஏன் அதே மாதிரி செயல்பட அனுமதிக்க மறுக்கிறது?” என்ற கேள்வியை இந்தியா சர்வதேசக் கூட்டத்தில் எழுப்பியது, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.
மோடி அவர்களை 140 கோடி பேர் பிரதமராக தேர்ந்தெடுத்தது, இந்தியாவுக்கு நல்லது செய்வதற்காகத்தான். அமெரிக்க பொருளாதாரம் சரியாமல் இருக்கவும், டாலரின் ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தவும் மக்கள் வாக்களிக்கவில்லை. தேச தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு நலனுக்கே விசுவாசமாக செயல்பட வேண்டும் என்பதே மையக்கருத்து. எனவே தான் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்கு கட்டுப்படாமல், நாட்டின் நலன் கருதி, அமெரிக்காவின் நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார். இதனால் தான் மோடி மீது டிரம்புக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டிரம்பின் கோபம் மோடியை எதுவும் செய்ய முடியாது என்பதை உலக நாடுகள் தற்போது புரிந்து கொண்டிருக்கும்,
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
