முட்டாள் பாகிஸ்தான் அமைச்சரின் திமிர் பேச்சு.. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தீவிரவாதிகள் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக.. ஆப்கானிஸ்தான் கொரில்லா படை தாக்கினால் பாகிஸ்தான் சாம்பலாகிவிடும்.. அறிவே இல்லாமல் ஆட்டம் போடும் பாகிஸ்தன தலைவர்கள்..!

துருக்கியின் அங்காரா நகரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகியுள்ளது. துருக்கிய அதிகாரிகள் மற்றும் கத்தாரை சேர்ந்த…

pakistan

துருக்கியின் அங்காரா நகரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

துருக்கிய அதிகாரிகள் மற்றும் கத்தாரை சேர்ந்த மத்தியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், பேச்சுவார்த்தை தோல்வி குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், “ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இந்தியாவின் கைப்பாவையாக மாறிவிட்டதால்தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையில், இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருள், பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு மற்றும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) பற்றியதாகவே 95% இருந்தது. இதில் இந்தியாவின் தலையீடு மிக குறைவே.

ஆனால் பாகிஸ்தானின் முட்டாள் அமைச்சர், “இந்த முறை எங்களின் பதிலடி 50 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது எந்தவிதமான பொருளாதார பலமோ, வலிமையான ராணுவமோ இல்லாத ஒரு நாடு விடுக்கும் வெற்று மிரட்டல் என்பது உலகமே அறிந்தது.

பாகிஸ்தானின் இந்த மிரட்டல்களுக்கு பதிலளித்த ஆப்கானிஸ்தான் தரப்பு, “இந்த முறை நாங்கள் உங்கள் எல்லை பகுதியிலுள்ள படைகளை தாக்க மாட்டோம். மாறாக, இஸ்லாமாபாத்தையே தாக்குவோம்” என்று நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பஞ்சாபி இஸ்லாமியர்களின் கௌரவத்தின் அடையாளமாக இருப்பதால், இந்த எச்சரிக்கை மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிய தலிபான்களால் இஸ்லாமாபாத்தை தாக்க முடியும் என்ற அச்சம் நிலவுகிறது. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே விலைமதிப்புள்ள ட்ரோன் தாக்குதல் அமைப்புகளை சீனாவிடம் இருந்து பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் உள்ளன.

இந்த பதற்றமான சூழலில், இந்தியாவின் விமானப்படையை சேர்ந்த ஒரு குளோப்மாஸ்டர் ஹெர்குலஸ் விமானம், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகராம் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் நிவாரண பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது, பிராந்தியத்தில் இந்தியாவின் ராஜதந்திர நகர்வுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கிறது.

பாகிஸ்தானில் இன்றைய முக்கியப் பிரச்சினையே தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) தான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தக் குழுவை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) அமைப்புதான் ஒரு காலத்தில் உருவாக்கியது.

இந்தியாவுக்கு எதிராக எல்லையோர தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது போலவே, இன்று அதே ஆயுதம் பாகிஸ்தானுக்கே எதிராக திரும்பியுள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா பகுதிகளில் TTP-யின் தாக்குதல்கள் இந்த ஆண்டு 700-ஐ தாண்டியுள்ளது. TTP வெறும் குகை மனிதர்கள் அல்ல; அது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஒரு தொழில்முறை இராணுவப் படை. சமீபத்தில், TTP-யினர் பாகிஸ்தான் வீரர்களின் உடலுறுப்பை கட்டி ட்ரோன்களை அனுப்பிய கொடூர செயலும் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் இன்று இந்தியாவிடம் 26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு எந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க மறுத்ததோ, அதே டிமாண்டை இன்று ஆப்கானிஸ்தானிடம் முன்வைக்கிறது. தான் உருவாக்கிய அச்சுறுத்தலை தானே அனுபவிக்கிறது பாகிஸ்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2022 முதல் தலிபான்களை கையாளும் விதம் ஒரு ராஜதந்திர மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும். இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் எப்போதும் கலாச்சார உறவை கொண்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு உதவி, மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானில் இடம் கொடுக்க மாட்டோம் என்ற தலிபான்களின் வாக்குறுதியை அவர்கள் இதுவரை காப்பாற்றி வருகின்றனர்.

அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இந்தியா அங்கு கிரிக்கெட் ஸ்டேடியங்களை உருவாக்கி கொடுத்தது. ரஷீத் கான் போன்ற வீரர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் உருவானது இந்த கலாச்சார ஒருங்கிணைப்பின் விளைவே.

பாகிஸ்தான் இன்று தன்னை மீறி பல சாகசங்களை செய்வதாக நினைத்து கொண்டு, இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டுவது, இந்தியாவிடம் வால் ஆட்டுவது, இப்போது ஆப்கானிஸ்தானை மிரட்டுவது என பல முனைகளில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

தலிபான்களின் சமீபத்திய எச்சரிக்கையை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தாலிபான்கள் இஸ்லாமாபாத்தை தாக்கத் துணிந்தால், கொரில்லா போர்முறையில் அவர்களை தோற்கடிக்க பாகிஸ்தானால் முடியாது. வரலாறு மீண்டும் திரும்பும் நிலையில் உள்ளது.