பாகிஸ்தான் தற்போது உள்நாட்டிலும் வெளியிலும் பலமான நெருக்கடி நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய விமானப் படையின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அந்நாட்டின் இராணுவ பலவீனம் தெளிவாகியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுடன் நேரடியாக போரிடவோ அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின், பாகிஸ்தான் உடனடியாக சீனாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ சரணடைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இதில், பாகிஸ்தான் அமெரிக்காவை தேர்வு செய்தது. அதற்கு காரணம் ஆயுதங்கள் மற்றும் போர்ப்படை தளங்களின் ஆதிக்கம் இன்றும் அமெரிக்காவிடமே அதிகம். நேட்டோ போன்ற கூட்டமைப்புகளின் மூலம் உறுதியளிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால், சீனா அவ்வாறு உறுதியளித்த நாடுகளை காத்ததாக வரலாறு இல்லை.
ஆனாலும், அமெரிக்காவின் காலில் விழுந்ததோடு, பாகிஸ்தான் தனது பிராந்தியத்தில் நிலவும் உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சனைகளை தீர்க்க கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, பாகிஸ்தான் தற்போது ஒரு மும்முனைத் தாக்குதல் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
மும்முனைத் தாக்குதல் என்பது வெறும் வெளியிலிருந்து மட்டும் வரவில்லை. உள்நாட்டிலும் இரண்டு இயக்கங்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக போராடி வருகின்றன. இதன் மூலம் பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஐந்து முனை தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெஹ்ரிக்-இ-தாலிபான் (TTP): கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரமாக உள்ளது.
பலுஜிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA): பலுஜிஸ்தான் மாகாணத்தில் போராடுகிறது.
இந்த உள்நாட்டு கிளர்ச்சிகளுடன், அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவற்றின் நெருக்கடி சேர்ந்துள்ளது.
சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமாபாத்தில் தற்போது அவசரப் போர் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இது, இந்தியாவுடன் நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அடுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0 ஏதேனும் நடக்கலாம் என்ற அச்சம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.
1. இந்தியா: ஆபரேஷன் சிந்தூர் 2.0 அச்சம்: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவிடம் பகைத்துக்கொண்டது பாகிஸ்தான். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்திய தரப்பில் திரிசூல் போன்ற போர்ப்பயிற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
2. ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் தற்கொலைப்படை: அமைதி பேச்சுவார்த்தை வெற்றி அடைந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும், தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலைப்படை வீரர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக காபூல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினர் தாக்குதலுக்கு தயாராக பதிவு செய்துள்ளனர். இது, ஆப்கானிஸ்தானுடன் செய்யப்பட்ட அமைதி உடன்பாடு வெறும் மேலோட்டமானது என்பதை காட்டுகிறது. தலிபான்கள் போன்ற கொரில்லா படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் இராணுவம் பலவீனமாக உள்ளது.
3. ஈரான்: அமெரிக்க ஆதரவுக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதில் அமெரிக்காவுக்கு துணை நிற்போம் என்று பாகிஸ்தான் அறிவித்ததை ஈரான் ரசிக்கவில்லை. இந்த நிலைப்பாடு உள்நாட்டிலேயே எதிர்ப்பை சந்தித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவான பாகிஸ்தானின் இந்த செயல், ஈரான் பதிலடி கொடுக்கும் சரியான நேரத்திற்காக காத்திருக்கச் செய்கிறது. ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பகை மிக நிச்சயமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரே நேரத்தில் பாகிஸ்தானை தாக்கினால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் போய்விடும். இந்த மூன்றில் ஒரு நாடு தாக்கினாலே பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது, மூன்று சேர்ந்து தாக்கினால் கதம் கதம் தான். ஆனாலும் பாகிஸ்தானின் திமிர்பிடித்த ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஒரே குருட்டு நம்பிக்கை, டொனால்ட் ட்ரம்ப் எப்படியாவது தங்களை காப்பாற்றுவார் என்பதுதான்.
ட்ரம்ப் அமைதியை ஏற்படுத்தி, நோபல் பரிசு வாங்குவதற்காகவே இதுபோன்ற போரை நிறுத்தியதாக விளம்பரப்படுத்தி கொள்கிறார் என்பதும், உண்மையில் அவருக்கு இந்தியா-பாகிஸ்தான் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை என்பதையும் இந்தியா புரிந்து கொண்ட அளவுக்கு பாகிஸ்தானில் புரிதல் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் போரைத் தாம் நிறுத்தியதாக அவர் மீண்டும் மீண்டும் கூறி வருவது, அவரை உலக அரங்கில் ஒரு ‘நம்பர் ஒன் கோமாளி’யாக மாற்றியுள்ளது.
அமெரிக்க மக்களின் அதிருப்தியையும், இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் கோபத்தையும் சம்பாதித்துள்ள ட்ரம்ப் போன்ற நம்பகத்தன்மையற்ற ஒருவரை பாகிஸ்தான் நம்புவது, அந்நாடு எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பதை காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
