ரஷ்யாவிடம் இருந்து ஆயில் வாங்குவதை நிறுத்து.. அமெரிக்கா வலியுறுத்தல்.. அதெல்லாம் முடியாது, ஆனால் அதுக்கு பதிலா இதை செய்யலாம்.. இந்தியாவின் ஐடியாவால் பெட்டி பாம்பாய் அடங்கிய அமெரிக்கா.. இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்காவை பணிய வைத்த இந்தியா.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்..!

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் உலக அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் விமர்சனங்களுக்கு பிறகு, தற்போது ச்ரஷ்ய எண்ணெய் சப்ளையர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த நிலையில்,…

oil

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் உலக அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் விமர்சனங்களுக்கு பிறகு, தற்போது ச்ரஷ்ய எண்ணெய் சப்ளையர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த நிலையில், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய பதில் ‘இல்லை’ என்பதாகவே உள்ளது. ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியா முழுமையாக விலகவில்லை என்றாலும், அதன் எரிசக்தி உத்தியை மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்தியாவின் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை காட்டுகின்றன:

கடந்த மாதம், அமெரிக்க சப்ளையர்களிடமிருந்து இந்தியா ஒரு நாளைக்கு அரை மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் வாங்கியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய கொள்முதல் உயர்வாகும். இந்த கொள்முதல் நவம்பரிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஏற்றுமதியில் அமெரிக்கா விதித்துள்ள 50% வரியை சமன் செய்ய, வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா அதிக கச்சா எண்ணெய் வாங்கலாம். அமெரிக்காவின் WTI – West Texas Intermediate கச்சா எண்ணெய், உலகத் தரமான Brent எண்ணெயை விட தற்போது விலை குறைவாக உள்ளது. விலை குறைவாக இருக்கும் இடத்தில் வாங்குவது லாபகரமானது என்பதால், இந்தியாவுக்கு லாபம் தான்.

அதேபோல் இந்தியா தனது பாரம்பரிய எண்ணெய் பங்காளிகளான மேற்கு ஆசிய நாடுகளிடமிருந்தும் கொள்முதலை அதிகரித்துள்ளது. இது புதிய எரிசக்தி உத்தியின் இரண்டாம் பகுதியாகும். குறிப்பாக ஈராக்கின் பஸ்ரா எண்ணெய் வயல்களில் இருந்து இந்தியா அதிக அளவில் வாங்குகிறது. தற்போது, இந்தியாவின் மொத்த கொள்முதலில் கிட்டத்தட்ட 20% ஈராக்கின் பஸ்ரா எண்ணெய் வகையை சார்ந்துள்ளது.

இந்த இரு நாடுகளும் இணைந்து தற்போது இந்தியாவின் மொத்த தேவையில் 22% கச்சா எண்ணெயை சப்ளை செய்கின்றன. இந்த நாடுகள் விலையில் ஸ்திரத்தன்மையையும், மிக முக்கியமாக, நம்பகத்தன்மையையும் வழங்குவதால், இந்தியா மீண்டும் இவற்றை சார்ந்துள்ளது. தற்போது, ஈராக், சவூதி அரேபியா, மற்றும் அமீரகம் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 50% ஐ பூர்த்தி செய்கின்றன. கடந்த மாதம், ரஷ்யா இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 38%ஐ வழங்கியது. இது ஒரு பெரிய அளவாகும்.

அமெரிக்கா விதித்த சமீபத்திய தடைகள் இரண்டு பெரிய ரஷ்ய நிறுவனங்களான ரோஸ் நெஃப்ட் (Rosneft) மற்றும் லுக் ஆயில் (Lukoil) ஆகியவற்றை மட்டுமே குறிவைக்கின்றன. இது ஒட்டுமொத்த ரஷ்ய எண்ணெய் மீதான தடை அல்ல. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர், “ரஷ்ய கச்சா எண்ணெய் தடை செய்யப்படவில்லை; நிறுவனங்களும் கப்பல் வழிகளும் தான் தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்படாத ஒரு நிறுவனம் மூலம், விலை வரம்பை மதித்து, கப்பல் போக்குவரத்து சரியாக இருந்தால், நாங்கள் தொடர்ந்து வாங்குவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் புதிய ரஷ்ய ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால், அவர்கள் முழுமையாக விலகாமல், அமெரிக்க தடைகள் குறித்த தெளிவு கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர். இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பன்முகப்படுத்தியுள்ளது. இது இடரை குறைத்து, சப்ளையர் தளத்தை விரிவுபடுத்துகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவிலிருந்து அதிக கொள்முதல் செய்வதும், ரஷ்யா விஷயத்தில் சூழலுக்கு ஏற்ப அணுகுமுறையை கடைப்பிடிப்பதும் இந்தியாவின் புதிய ஆற்றல் உத்தியாகும்.