உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?! அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..

வீட்டை காலை மாலை இருவேளை கூட்டி, தினமும் துடைத்து, இரவில் சமையலறையை சுத்தம் செய்து என தூய்மையாய் இருந்தாலும் சில வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும். அதற்கு காரணம், அன்று சேரும் குப்பைகளை…

52719deb6c88b5d772089cc56175a080

வீட்டை காலை மாலை இருவேளை கூட்டி, தினமும் துடைத்து, இரவில் சமையலறையை சுத்தம் செய்து என தூய்மையாய் இருந்தாலும் சில வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும். அதற்கு காரணம், அன்று சேரும் குப்பைகளை அன்றே நீக்காமல் விட்டால் கரப்பான்கள் வர வாய்ப்பு உண்டு. உணவு பண்டங்கள் எங்கு இரைந்து கிடக்கின்றதோ அதை உண்ண கரப்பான்கள் வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக்கூடைகள், குழாய் ஓட்டைகள் ஆகிய இடங்களில் வசிக்கும். இப்படி கரப்பான்பூச்சி நம்ம வீட்டினுள் வராமல் இருக்க சில குறிப்புகள் இதோ…

கிராம்பு
கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் கிராம்பை போட்டு வைக்கலாம் இல்லையென்றால் கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். கிராம்பு வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை பாதிக்கு பாதி கலந்து, கரப்பான் பூச்சி உலவும் இடத்தில் வைக்கலாம், கரப்பான் பூச்சி அந்த இனிப்பை சாப்பிடவரும். சாப்பிட்ட கரப்பான்கள் உடனே இறந்துவிடும்.

83beba5011636abbfed4070fb194d072-1

பிரியாணி இலை
பிரியாணி இலையை நன்றாக பொடி செய்து, கரப்பான் பூச்சி சுற்றும் இடத்தில் அப்பொடியைத் தூவினால் அந்த வாசனைக்கு கரப்பான் பூச்சி எட்டிப்பார்க்காது.

மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு கலவை
மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் இந்த மூன்றையும் ஒன்றாக கலக்கவும். தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். இதனை கரப்பான்கள் வசிக்கும் இடங்களில் ஸ்பிரே செய்துவர கரப்பான் தொல்லை நாளடைவில் நீங்கும்.

போரிக் ஆசிட்
கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசையவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வுருண்டைகளை சாப்பிட்ட கரப்பான்கள், இறந்துவிடும்.

இப்படி செய்தால் கரப்பான் தொல்லையிலிருந்து உங்கள்வீட்டை காப்பாற்றலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன