இந்தியாவுக்கு எதிராக பொதுவான பகையை கொண்டிருக்கும் இரு வேறு துருவங்களான நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு, கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார ரீதியிலான சவால்களையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறது. இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களுக்குள் எந்தவித ஒற்றுமையும் இல்லாத இரு நாடுகள் ஒன்றுசேர்ந்து பயணிப்பது ஏன், மற்றும் இந்த உறவில் தற்போது என்னென்ன விரிசல்கள் உருவாகியுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்களை பார்ப்போம்.
சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான காரணி என்று பார்த்தால், அது இந்தியா மீதான எதிர்ப்பாக மட்டுமே உள்ளது. சீனா இந்தியாவை ஆசியாவின் வலுவான போட்டியாளராக பார்க்கிறது, அதே சமயம் பாகிஸ்தான் மதரீதியான வன்மத்துடனும், இந்தியாவை எதிர்ப்பதை கொள்கையாகவும் கொண்டு உருவான நாடு.
1960களில் இருந்தே சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு உறுதியாக இருந்து வருகிறது. 2013ஆம் ஆண்டு சீனாவின் கனவு திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்’ திட்டத்தின் கீழ், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஒப்பந்தம் கையெழுத்தானது. CPEC ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.
அரபிக் கடலில் இந்தியாவுக்கு சவால் விட சீனாவுக்கு ஒரு தளத்தை பாகிஸ்தான் வழங்கியது. இதற்கு பதிலாக, பாகிஸ்தானில் சீனா சுமார் 65 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்தது. சிபெக் திட்டமானது, சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அரபிக் கடலில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் சாலை மற்றும் ரயில் மார்க்கமாக இணைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டம், பாகிஸ்தானின் தலையெழுத்தை மாற்றி, அது ஒரு வல்லரசாக மாறும் என்றும், வெறும் ‘பஞ்சர் ஒட்டக்கூடிய ஆட்கள்’ கொண்ட நாடாக அல்லாமல், பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையும் என்றும் கனவு காணப்பட்டது. 2013இல் தொடங்கிய இந்த உறவு, 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது பல விரிசல்களை சந்தித்துள்ளது. இந்த உறவின் பின்னடைவுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன:
1. உலகளாவிய வர்த்தக போர்: இந்தியா போன்ற நாடுகளுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக போட்டியில், பாகிஸ்தானை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற எண்ணம் சீனாவுக்கு வந்துள்ளது. வர்த்தக போரை எதிர்க்க இந்தியாவுடன் கைகோர்ப்பது என்ற முடிவை சீனா எடுத்தது.
2. பாகிஸ்தானின் அமெரிக்க நெருக்கம்: சீனாவின் எதிரியாக கருதப்படும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் மீண்டும் நெருக்கம் காட்டி, அமெரிக்காவுக்கு பசினி துறைமுகம் அருகே தளத்தை வழங்க முடிவு செய்தது. இது குவாடர் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால், சீனாவை பெரும் சந்தேகத்துடன் பார்க்க வைத்துள்ளது.
3. முதலீட்டுக்கு வருவாய் இல்லை: சிபெக் திட்டத்தில் போட்ட 65 பில்லியன் டாலர் முதலீட்டில் இதுவரை சீனாவுக்கு எதிர்பார்த்த வருவாய் (Returns) எதுவும் கிடைக்கவில்லை. அரபிக் கடலில் ஒரு ராணுவத் தளம் அமைப்பதற்காக எவ்வளவு காலத்துக்குச் செலவு செய்ய முடியும் என்று சீனக் கொள்கை வகுப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்களில் பாகிஸ்தான் முறியடிக்கப்பட்டதால், ஆப்கனையே வெல்ல முடியாத பாகிஸ்தானுடன் சேர்ந்து ஒரு பயனும் இல்லை என்ற முடிவுக்கு சீனா வந்துள்ளது.
இந்தியக் கடற்படையின் அதிகரித்த வலிமை, அரபிக் கடலில் உள்ள குவாடர் துறைமுகத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக எதையும் சாதிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், அதுவும் பாகிஸ்தான் போலவே தங்கள் பேச்சைக் கேட்கும் என்று சீனா நினைத்தது. ஆனால், பாகிஸ்தான் அமெரிக்கா பக்கமும், தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனும் நெருக்கம் காட்டுவது சீனாவின் திட்டத்தை பின்னடைவாக்கி உள்ளது.
மொத்தத்தில் அமெரிக்காவின் வர்த்தக போரை சீனா எதிர்கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் இந்தியாவின் உதவி தேவைப்படும். இந்தியா, சீனா கூட்டணி சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம், பாகிஸ்தானுக்கு உதவி செய்வதால் எந்த பயனும் இல்லை என்ற முடிவுக்கு சீனா வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
