பாகிஸ்தானின் எதிர்காலம் குறித்த தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு சமூக ஊடக பக்கம் வெளியிட்ட ஒரு வரைபடம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அலட்சியம், உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அண்டை நாடுகளின் மறைமுக எச்சரிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஒரு நாடே காணாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வரைபடத்தில் பாகிஸ்தானி பாதி இந்தியாவுக்கும், இன்னொரு பாதி ஆப்கானிஸ்தானுக்கும் மாறிவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியான சர்ச்சைக்குரிய வரைபடம் தற்போதுள்ள பாகிஸ்தான் நிலப்பரப்பை இரண்டாக பிரித்து காட்டுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் உள்ளிட்ட ஒரு பெரிய பகுதி இந்தியாவுடன் இணைவது போலவும், கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளிட்ட வடக்கு பகுதிகள் ஆப்கானிஸ்தானுடன் இணைவது போல வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தை வெளியிட்டவர்கள், “எதிர்காலம் இதை நோக்கியே நகர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். இது, சர்வதேச அரங்கில், குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பாகிஸ்தானை பங்கு போட்டு கொள்ளுமா? என்ற யூகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் உள்நாட்டு நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியம்
இத்தகைய தீவிரமான சவால்களை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வேளையில், அதன் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தீவிரவாத தாக்குதல்கள், மற்றும் சிந்து, கைபர் பக்துன்க்வா போன்ற பகுதிகளில் நடக்கும் தொடர்ச்சியான கலவரங்களை கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றை தடுக்கவோ பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் எவ்விதமான அக்கறையும் காட்டுவதில்லை என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்நாட்டுப் பிரச்சனைகளை சரிசெய்யாமல், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில், குறிப்பாக வாஷிங்டனில் சென்று ‘டான்ஸ் ஆடுவதையே’ குறியாக வைத்து செயல்படுவதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது, பாகிஸ்தான் தேசத்தின் இருப்பை விட, தங்கள் பதவிகளை காப்பாற்றுவதிலேயே அவர்கள் அதிக கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது.
பாகிஸ்தானுக்குள் நடக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு ஆட்சியாளர்கள் முயற்சிக்காத நிலையில், இந்திய அரசாங்கம் ஏற்கனவே தனது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் அரசாங்கமும் வரைபடம் மூலம் ஒரு மறைமுகமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது, பாகிஸ்தானின் அரசியல் மற்றும் புவியியல் எதிர்காலம் குறித்த ஆழ்ந்த சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
உள்நாட்டுக் கலவரங்கள், சர்வதேச அளவில் ஏற்படும் சவால்கள், அண்டை நாடுகளின் எச்சரிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில், “பாகிஸ்தான் என்ற ஒரு நாடு நாடாக தொடருமா?” என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்கள் கற்பனைக்கு எட்டாத, நினைக்க முடியாத பல விஷயங்கள் மிக விரைவில் நிகழ இருக்கின்றன என்பதை உணர்ந்து, உள்நாட்டு குழப்பங்களை தீர்க்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த பிரச்சனைகள் பாகிஸ்தானின் நிலப்பரப்பு மற்றும் அதன் எதிர்கால இருப்பையே கேள்விகுறியாக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
