விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாகப் பரவி வரும் ஒரு தகவல், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களான FJ மற்றும் அரோரா சின்க்ளேர் ஆகிய இருவரும் ஜோடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்பதே அந்த தகவல்.
FJ மற்றும் அரோரா சின்க்ளேர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டால், பார்வையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால், இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் குழுவினர் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளையும், சண்டைகளையும், சுவாரஸ்யங்களையும் உருவாக்குவது இந்த இருவரும் தான். இவர்களை சுற்றியே மற்ற பல போட்டியாளர்களின் ‘கேம் பிளே’ பின்னப்பட்டுள்ளது. அரோராவை சுற்றி திவாகர், கமருதீன், துஷார் ஆகிய மூவரின் ஆட்டம் பிணைந்துள்ளது.
குறிப்பாக, கமருதீன், “நான் அரோராவுக்காகத்தான் உள்ளே வந்தேன்” என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அரோரா வெளியேறினால், இவர்களது ஆட்டமும் மங்கி, அவர்களும் விரைவில் வெளியேற வாய்ப்புள்ளது.
அதேபோல் FJ, ஆதிரையை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். ஆதிரை, FJ-உடன் சண்டையிட்டாலும், உணர்வுப்பூர்வமாக அவருடன் மிகவும் இணைந்திருக்கிறார். FJ கோபித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்தால், ஆதிரை சென்று அவரை சமாதானப்படுத்துவதை காணலாம். FJ வெளியேறினால், ஆதிரையின் ஆட்டம் முற்றிலும் பாதிக்கப்படும்.
இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, பிக் பாஸ் குழுவினர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கருத்தில்கொண்டு, FJ மற்றும் அரோரா சின்க்ளேர் ஆகிய இருவரையும் ஜோடியாக வெளியேற்றுவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று திட்டவட்டமாக இன்னொரு தரப்பு தெரிவிக்கின்றது.
அப்படி இந்த இருவர் எலிமினேஷன் இல்லையெப்றால் இந்த வாரம் வெளியேற போகிறவர் அப்சராவாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்கள் ஆகியும் அவர் தரப்பில் இருந்து எந்தவிதமான சுவாரஸ்யமான ‘கண்டெண்ட்’டும் கொடுக்கப்படவில்லை. அவர் குறித்த பேச்சோ, வீடியோக்களோ சமூக ஊடகங்களில் இல்லை.
வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர தயாராக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடம் கொடுக்கவும், கண்டெண்ட் இல்லாத ஒருவரை வெளியேற்றவும் பிக் பாஸ் குழு அப்சராவை பலிகொடுக்கும் வாய்ப்புள்ளது.
ஒரு திருநங்கை போட்டியாளராக அப்சரா உள்ளே வந்தது மகிழ்ச்சியளித்தாலும், அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிப்பதாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
“இந்த மேடை எளிதில் கிடைப்பதில்லை. சீசன் 6-ல் ஷிவின் எப்படி தன் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், டாப் 3 வரை சென்று மிகப்பெரிய சவாலுக்கு காரணமாக இருந்தாரோ, அதேபோல அப்சராவும் செயல்பட்டிருக்கலாம்.
FJ மற்றும் அரோராவின் ‘அசிங்கமான ஆட்டத்தை’ இன்னும் சில காலம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரை சரிசெய்த பிறகே பிக் பாஸ் குழு அவர்களை வெளியேற்றும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
