அடிச்சது லக்.. பெண்களுக்கு ஜாக்பாட்.. 28 லட்சம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பது எப்போது? துணை முதல்வர் உதயநிதி சட்டமன்றத்தில் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 28 லட்சம் பெண்களுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை…

magalir

தமிழகத்தில் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 28 லட்சம் பெண்களுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு குறித்துப் பேசினார்.

புதிய விண்ணப்பங்கள்: தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக சுமார் 28 லட்சம் புதிய பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்யும் பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்.

இந்த பரிசீலனையில் தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக உதயநிதி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மகளிரின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்ட உதயநிதி, கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 1.14 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக அரசு சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும் பல பெண்கள் பயன்பெறும் வகையில், அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர் போன்ற சில விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.