அதிமுக + தவெக + பாஜக ஒரு கூட்டணி: திமுக+ விசிக+ காங் + தேமுதிக+ பாமக+ மதிமுக+ கம்யூனிஸ்ட் ஒரு கூட்டணி.. சம பலத்துடன் இருக்கிறதா இருமுனை போட்டி? யாருக்கு வெற்றி?

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் மிகவும் சிக்கலாகவும், பரபரப்பாகவும் மாறியுள்ளன. ‘அ.தி.மு.க. + த.வெ.க. + பா.ஜ.க.’…

admk dmk vijay

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் மிகவும் சிக்கலாகவும், பரபரப்பாகவும் மாறியுள்ளன. ‘அ.தி.மு.க. + த.வெ.க. + பா.ஜ.க.’ ஒரு அணியாகவும், அதற்கு எதிராக ‘தி.மு.க. + வி.சி.க. + காங்கிரஸ் + தே.மு.தி.க. + பா.ம.க. + ம.தி.மு.க. + கம்யூனிஸ்ட்’ கட்சிகள் ஒருங்கிணைய வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு கூட்டணி அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்த இருமுனை போட்டி உண்மையில் சாத்தியமா? அப்படி நிகழ்ந்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

அ.தி.மு.க. + த.வெ.க. + பா.ஜ.க. கூட்டணி: அ.தி.மு.க. தலைமையில் இயங்கும் இந்த கூட்டணியில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி, இரட்டை இலைக்கு என இருக்கும் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளும்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் திரளான புதிய வாக்குகளை பிரிக்கும் ஆற்றல் கொண்டது. அ.தி.மு.க.வின் பாரம்பரிய எதிர்ப்பு வாக்குகளையும், தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகளையும் இது கவர்ந்தால், இந்த கூட்டணி பலம் பெறும்.

மத்திய ஆளும் கட்சியின் ஆதரவு, குறிப்பாக கோவை, சென்னை போன்ற நகர பகுதிகளில் உள்ள வட இந்திய வாக்குகளையும், ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகளையும் உறுதி செய்யும். அத்துடன், மத்திய அரசின் செல்வாக்கும் நிதிபலமும் இந்த அணிக்கு சாதகமாக அமையும்.

இன்னொரு கூட்டணியாக தி.மு.க. + வி.சி.க. + காங். + தே.மு.தி.க. + பா.ம.க. + ம.தி.மு.க. + கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில்
ஆளும் திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள், மற்றும் வலுவான கட்டமைப்பு ஆகியவை இதன் பலமாகும். திராவிட சித்தாந்த பிடிப்புள்ள வாக்குகளை தக்க வைக்கும்.

வி.சி.க. & காங். & கம்யூனிஸ்ட் ஆதரவு, தி.மு.க.வின் பாரம்பரிய சிறுபான்மை மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வாக்குகளை உறுதி செய்யும். : வைகோவின் தலைமையிலான ம.தி.மு.க. திராவிட ஆதரவாளர்களின் வாக்குகளை பிரிந்து செல்லாமல் தடுக்க உதவும். தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவது என்பது மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். வட மாவட்டங்களில் பா.ம.க.வின் வாக்குகளும், விஜயகாந்தின் பாரம்பரிய விசுவாச வாக்குகளும் சேரும்போது, தி.மு.க. கூட்டணி ஒரு பலமான சமூக-அரசியல் வாக்கு வங்கியைப் பெறும்.

அ.தி.மு.க. கூட்டணியை பொருத்தவரை, த.வெ.க.வின் ‘புதிய முகம்’ என்னும் அனுகூலம் இருந்தாலும், பா.ஜ.க.வின் மீதான எதிர்ப்பு அலை மற்றும் பாரம்பரிய அ.தி.மு.க. வாக்கு வங்கி மீதான நம்பகத்தன்மை ஆகியவை சவாலாக இருக்கும். திமுக கூட்டணியில் விசிக, பாமக என இரண்டும் இருப்பதால் இரு கட்சி தொண்டர்கள் இணைந்து பணி செய்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.