தவெகவை ஆதரிக்கும் இளைஞர்கள் ‘தற்குறி’, ‘அணில் குஞ்சு’, ‘புல்லிங்கோ பாய்ஸ்’களா? ஏன் இந்த கீழ்த்தரமான அரசியல்? பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் கூடுபவர்கள் மட்டும் என்ன புரட்சியாளர்களா?

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் பின்னால் திரளும் இளைஞர் பட்டாளம் ஆகியவை குறித்து தமிழக அரசியல் களத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கரூரில் விஜய்யின் பேரணியில்…

vijay crowd

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் பின்னால் திரளும் இளைஞர் பட்டாளம் ஆகியவை குறித்து தமிழக அரசியல் களத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கரூரில் விஜய்யின் பேரணியில் நிகழ்ந்த துயர சம்பவமும், அதனை தொடர்ந்து ஆளுங்கட்சியான தி.மு.க.வின் நடவடிக்கைகளும் இளைஞர்களின் அரசியல் மனநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அரசியல் நோக்கர்கள் விவாதித்து வருகின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினர், விஜய்யை ஒரு சாதாரண தலைவராகப் பார்க்காமல், மாற்றத்திற்கான ஆயுதமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மெரினாவில் அமைதி வழியில் திரண்ட 8 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களே, தற்போது விஜய்யின் பின்னால் திரள்வதை சுட்டிக்காட்டப்படுகிறது.

தவெகவை ஆதரிக்கும் இளைஞர்களை ஆளுங்கட்சியினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் ‘தற்குறி’, ‘அணில் குஞ்சு’, ‘புல்லிங்கோ பாய்ஸ்’ என்று இழிவுபடுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் உரிமைக்குரலுடன் திரளும்போது, அவர்களை இழிவுபடுத்துவது, அவர்களின் அரசியல் விழிப்புணர்வை மேலும் தூண்டவே செய்யும் என்று எச்சரிக்கப்படுகிறது.

“அரசியல் கட்சிகள் என்ற பெயரில் இதுவரை செய்த தவறுகள், ஊழல், அட்டூழியங்கள் மற்றும் அரச பயங்கரவாதத்தின் எதிர்வினைதான் இந்த இளைய தலைமுறை வேறொரு மாற்றத்தை தேடிச் செல்வது,” என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான நிலையில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும் முன், கழிவறை வசதி, பொதுமக்கள் பாதுகாப்பு, நுழைவு-வெளியேறும் வழிகள் போன்ற அடிப்படை விஷயங்களை சரிபார்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால், அரசு இந்த பொறுப்புக்கூறலை செய்ய தவறிவிட்டது.

விஜய் தாமதமாக வந்தார் என்று பரப்பப்பட்ட செய்தி பொய்யானது என்று மதுரை கோர்ட்டில் காவல்துறை அளித்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சிலர், பொய் செய்திகளை பரப்பி விஜய்யை வீழ்த்த முயல்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில், “ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், நீண்ட கால தீர்வை நோக்கி பயணிப்போம்” என்று பதிவிட்டார். ஒருபுறம் முதலமைச்சர் நல்லெண்ண அறிக்கைகளை வெளியிடும்போது, மறுபுறம் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தவெகவை ஆதரிக்கும் இளைஞர்களை இழிவுபடுத்துவதும், அடக்குமுறைகளை தொடர்வதும் முரண்பட்ட அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, அங்கெல்லாம் புரட்சி இருக்கும்” என்ற கருத்தை மேற்கோள் காட்டி, ஆளுங்கட்சியின் தரப்பு விஜய்யை ஒடுக்க நினைக்காமல், உளவியல் ரீதியாக இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.