திடீரென தனித்து போட்டியிடுங்கள் என விஜய்க்கு அறிவுரை சொல்லும் போலி அரசியல் விமர்சகர்கள்.. விஜய் தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு லாபம் என்ற கணிப்பா? அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல விடாமல் தடுக்கும் சக்திகள் யார்? போனால் கதை முடிஞ்சிருமே என்ற பயமா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில், இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சித்து…

vijay 5

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில், இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்த சில போலி அரசியல் விமர்சகர்கள், திடீரென அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, “நீங்கள் தனித்து போட்டியிடுங்கள்” என்று அறிவுரை கூறி வருவது அரசியல் நோக்கர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் சிலர், ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் பணம் வாங்கிக்கொண்டு, எதிரணி கட்சிகளை மோசமாக விமர்சிப்பதும், தங்கள் முதலாளிகளின் கட்சியை பெயர் அளவுக்கு விமர்சிப்பதுமாக ஒரு ‘டாஸ்க்கை’ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்த போலி விமர்சகர்கள், விஜய்யிடம் கரிசனம் காட்டுவதுபோல் பேசுவதன் நோக்கம் பின்வருமாறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது:

“விஜய் தனித்து போட்டியிட்டால் தான், அவரது உண்மையான வாக்கு சதவீதம் என்னவென்று தெரியும். அதன்பின், 2029 நாடாளுமன்ற தேர்தலில் அவர் பலமான கட்சிகளுடன் பேரம் பேசி அதிகத் தொகுதிகளை பெற முடியும்” என்று இவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால், இதன் மறைமுகமான அரசியல் கணிப்பு என்னவென்றால், விஜய் தனித்து போட்டியிட்டால், தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக அதாவது தி.மு.க கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக கூட்டணி, சீமான் கூட்டணி என மாறும். இந்த சூழ்நிலை, பலமான வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகளுக்கு இடையேயான வாக்கு பிரிவுக்கு வழிவகுத்து, தி.மு.க. குறைந்த வாக்கு சதவீதத்தில் கூட தங்களுக்கு விருப்பப்பட்ட அணி வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் தான் இந்த வியூகம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது நிலவும் சூழலில், விஜய் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த பலமான கூட்டணி உருவாவதை தடுக்க நினைக்கும் சக்திகள்தான், “தனித்துப் போட்டி” என்ற மாய வலையை விஜய்யை சுற்றி பின்னுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.

“விஜய் அந்தக் கூட்டணிக்குச் சென்றால், தங்கள் கட்சியின் கதை முடிந்துவிடும்” என்ற பயத்தின் வெளிப்பாடாகவே இந்த போலி அறிவுரைகள் இருக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கருதுகின்றனர்.

விஜய் தரப்பிலிருந்து உறுதியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், அவரது முடிவுகள் குறித்து ஊகங்கள் உலாவுகின்றன. ஆரம்பத்தில் தனித்து போட்டி என்று விஜய் நினைத்தாலும், தற்போது அவரது எண்ணம் மாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்றும், அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணியை ஏற்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் முடிவு செய்திருக்கலாம். மேலும், இந்த தேர்தலில் கூட்டணியுடன் களமிறங்கி, அடுத்த ஐந்து ஆண்டுகள் பொறுமையாக தனது கட்சி பலத்தை பெருக்கி, அதன் பிறகு தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யலாம் என்ற தெளிவான முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இவை அனைத்தும் அரசியல் யூகங்களாக இருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதையும், அதற்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.